மெட்ரோவில் ஒலித்த தாத்தாவின் குரல்..ஆச்சரியத்தில் அசந்துபோன பேரன்!

முதல் முறையாக டெல்லி மெட்ரோவில் பயணம் செய்த சிறுவனுக்கு இது நெகிழ்ச்சி மிகுந்த அனுபவமாக மாறியுள்ளது.
delhi metro
Published on: 

தாத்தாவின் குரலை மெட்ரோ ரெயிலில் முதல் முறையாக கேட்ட பேரனின் ஆச்சரியமும், தாத்தாவின் பெருமையும் நிறைந்த வீடியோ சமூகவலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது.

மெட்ரோவில் ஒலிக்கும் குரல்

டெல்லி மெட்ரோவில் பயணிக்கும் கோடிக்கணக்கானோருக்கு ஷம்மி நரங்கின் குரல் பரிச்சியமானது .முன்னாள் செய்தி வாசிப்பாளரான இவரது குரல், பல ஆண்டுகளாக மெட்ரோ ரெயில்களில் ஒலித்து வருகிறது.

தாத்தாவின் குரல் கேட்டு வியந்த பேரன்

இந்த நிலையில், ஷம்மி நரங் தனது பேரன் ருஷானை முதல் முறையாக டெல்லி மெட்ரோவில் அழைத்துச் சென்றுள்ளார். மஞ்சள் வழித்தடத்தில் குடும்பத்தினருடன் சிறுவன் பயணம் செய்தபோது, மெட்ரோவில் வழக்கமான அறிவிப்பு ஒலித்தது.

அப்போது ஒலித்த குரல், ருஷானுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான தாத்தாவின் குரல். ஆனால் வீட்டில் கேட்டு பழகிய அந்த குரலை மெட்ரோ ரெயிலுக்குள் கேட்டதால், சிறுவன் ஆச்சரியத்திலும் குழப்பத்திலும் இருந்துள்ளான்.

குரலை உணர்ந்த சிறுவன்

ஷம்மி நரங் தனது பேரனை கையில் வைத்தபடி பயணம் செய்தார். ருஷானின் பெற்றோர், மெட்ரோவில் ஒலிப்பது தாத்தாவின் குரல் என்பதை அவனுக்கு புரிய வைக்க முயன்றனர். பின்னர் அந்த குரல் தனது தாத்தாவுடையது என்பதை சிறுவன் உணர்ந்துகொண்டான்.

சமூக வலைதளத்தில் பகிர்ந்து நெகிழ்ச்சி

இந்த நெகிழ்ச்சியான தருணத்தை ஷம்மி நரங் சமூக வலைதளத்தில் வீடியோவாக பகிர்ந்துள்ளார்.அந்த சமூகவலைதள் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது

நான் என்றென்றும் இந்த மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்யாமல் இருக்கலாம். ஆனால் என் குரல் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கடந்து செல்லும் என்பதை நினைக்கும்போது எனக்கு மிகுந்த பெருமையாக இருக்கிறது. என்னிடமிருந்து என் குட்டிப் பேரன் ருஷானுக்கும், ஒருவேளை என்றாவது ஒரு நாள் அவனது பேரக் குழந்தைகளுக்கும்... அதற்கும் அப்பாலும் அது பயணிக்கும்

இன்று, ருஷானை அவனது முதல் மெட்ரோ ரயில் பயணத்திற்கு அழைத்துச் சென்றோம். ரயிலுக்குள் தாத்தாவின் குரல் எதிரொலிப்பதைக் கேட்டு அவன் ஆச்சரியமும் வியப்பும் அடைந்தான்... அவனுக்கு நன்கு பரிச்சயமான அந்தக் குரல், இதுவரை அவன் கேட்டிராத ஒரு சூழலில் ஒலித்ததே அதற்குக் காரணம்.எங்களுக்கு இது மிகவும் சிறப்பான ஒரு தருணம்.

என்று பதிவிட்டுள்ளார்.

தாத்தாவின் குரலை மெட்ரோ ரெயிலில் முதல் முறையாக கேட்ட பேரனின் ஆச்சரியமும், தாத்தாவின் பெருமையும் நிறைந்த இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com