

நடிகர், பாடகர், அரசியல்வாதி என பன்முகத்திறன் கொண்ட ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் நாளை தனது 72வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார்.
இந்நிலையில் அவருக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சரும், தவெக தலைவரும், சக திரையுலக சகோதரருமான விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் கூறியுள்ளதாவது;
அன்பிற்கினிய கமல்ஹாசன் அவர்களுக்கு, தங்களின் 07.11.2026-ஆம் தேதிய பிறந்தநாளையொட்டி, என்னுடைய இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், மனநிறைவுடனும், மகிழ்ச்சியுடன் வாழ்ந்திடவும், தாங்கள் கலைத்துறை மற்றும் பொது வாழ்வில் மேலும் பல சிறப்புகளைப் பெற்று, மக்களுக்கான தங்கள் அர்ப்பணிப்பான பணிகளைத் தொடர்ந்து சிறப்புடன் ஆற்றிட என் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்”.
என தெரிவித்துள்ளார்.
சித்தா பட இயக்குநர் எல்.யு.அருண் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘சண்டியர்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த தலைப்பு அறிவிப்பு இன்று வெளியான நிலையில், படப்பிடிப்பு நாளை பூஜையுடன் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதற்கட்டமாக மதுரையில் படப்பிடிப்பு நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.