அகல் விளக்கு பதிப்பக உரிமையாளரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் கோரிக்கையை ஏற்று மோகனை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது
அகல் விளக்கு பதிப்பகம்
Published on: 

ஏஐ நூல் கொள்முதல் ஊழல் வழக்கில் கைதான அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகனை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது

காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் கோரிக்கையை ஏற்று அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகனை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுஇன்று பிற்பகல் 12 மணியிலிருந்து நவ.30 மாலை 4 மணிவரை காவல்துறை விசாரணைக்கு அனுமதியானது வழங்கப்பட்டுள்ளது

புகாரின் பின்னணி

கோவை பெரியார் அறிவுலகத்தில் போலியான புத்தக முறைக்கேடு புகாரின் அடிப்படையில் அகல் விளக்கு, பீனிக்ஸ் உள்ளிட்ட பதிப்பகங்களிடமிருந்து சுமார் ₹1.74 கோடி மதிப்புக்கு நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட தரமற்ற தகவல்கள் மற்றும் பிழையான விவரங்களுடன் புத்தகங்கள் வழங்கப்பட்டதாகப் புகார் கூறப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து மோகனைக் கைது செய்ததுடன், தொடர்புடைய இடங்களில் சோதனைகளும் நடத்தப்பட்டன. நூலகத் துறை அதிகாரிகள் சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும், பதிப்பகத்தின் வங்கிக் கணக்குகளை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் அகல்விளக்கு பதிக்க உரிமையாளர் மோகனை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது

X