தினகரன் உத்தமபுத்திரன் வே‌ஷம் போடுவதை தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்- அமைச்சர் உதயகுமார்

தினகரன் உத்தமபுத்திரன் வே‌ஷம் போடுவதை தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார். #ADMK #TNMinister #Udhayakumar #TTVDhinakaran
தினகரன் உத்தமபுத்திரன் வே‌ஷம் போடுவதை தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்- அமைச்சர் உதயகுமார்
Published on

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிலைமான் உள்ளிட்ட 9 கிராமங்களில் 418 பயனாளிகளுக்கு ரூ.65 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் நடராஜன், எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிந்ததும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட மாற்றத்தை இன்றைக்கு அரசியலாக்கி தினகரன் ஆதாயம் தேட முயற்சி செய்கிறார். அவரை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்ததை மறுக்கவில்லை.

எப்போதோ நடந்த நிகழ்ச்சியை இப்போது கூறி அ.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தலாம் என்று தினகரன் நினைக்கிறார். அவரது எண்ணம் நிறைவேறாது.

தினகரனின் பழைய முயற்சி புதிய வடிவத்தில் வெளிவந்துள்ளது. குட்டையை- குழப்பி திருப்பரங்குன்றத்தில் மீன் பிடித்து விடலாம் என்று தினகரன் நினைக்கிறார். அவரது முயற்சி எடுபடாது.

தினகரனின் கற்பனை கலந்த எதிர்பார்ப்பை தொண்டர்கள் முறியடிப்பார்கள். அவரது எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com