அனைத்து மாணவர்களுக்கும் விரைவில் பஸ் பயண அட்டைகள் - தமிழக அரசு தகவல்

சென்னையில் இதுவரை 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச பஸ் பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள மாணவர்களுக்கும் விரைவில் வழங்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் கூறினார். #FreeBuspass #Students
அனைத்து மாணவர்களுக்கும் விரைவில் பஸ் பயண அட்டைகள் - தமிழக அரசு தகவல்
Published on: 

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் கல்வி பயின்றிட ஏதுவாக, அரசின் சார்பில் இலவச பஸ் பயண அட்டைகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இலவச பஸ் பயண அட்டை பல்வேறு பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டு, ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவில் வழங்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார்.

அதுவரையில் பள்ளி மாணவர்கள் சீருடையிலும், கல்லூரி மாணவர்கள் தங்களின் கல்லூரி அடையாள அட்டை வாயிலாகவும் பஸ்சில் பயணம் செய்திட அனுமதிக்குமாறு ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #FreeBuspass #Students

X

Maalai Malar
www.maalaimalar.com