தீபாவளிக்கு அப்புறம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட ‘பக்கோடா’: அதிலும் தமிழகம் டாப்

லோக்கல் டீக்கடை முதல் பாராளுமன்றம் வரை சூடுபிடித்துள்ள பக்கோடா விவகாரம்தான் கடந்த ஒரு வாரமாக கூகுளில் தேடப்பட்ட சொல் என தகவல் வெளியாகியுள்ளது. #Pakoda
தீபாவளிக்கு அப்புறம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட ‘பக்கோடா’: அதிலும் தமிழகம் டாப்
Published on

வேலைவாய்ப்பு குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, “நிறைய பக்கோடா கடைகள் தொடங்கப்பட்டுள்ளன” என பேச, “பக்கோடா விற்பது வேலைவாய்ப்பு என்றால், பிச்சை எடுப்பதும் வேலைவாய்ப்புதான்” என முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம் பதிலடி கொடுத்தார்.

பக்கோடா விவகாரம் சூடுபிடித்ததை அடுத்து, “சும்மா இருப்பதற்கு பக்கோடா வியாபாரம் செய்வது மேல்” என பாராளுமன்றத்தில் அமித்ஷா கூற “பொறியியல் படித்தது பக்கோடா விற்கவா?” என எதிர்க்குரல் எழுந்தது. மேலும், பெங்களூரில் மோடியின் பொதுக்கூட்டம் அருகே, இளைஞர்கள் ‘மோடி பக்கோடா.. அமித்ஷா பக்கோடா’ என கூவிக்கூவி விற்றனர்.

கடந்த ஒரு வாரமாக ‘எங்கு காணினும் பக்கோடா’ என்பது போல எல்லா அரசியல்வாதிகளின் பேச்சிலும் பக்கோடா தெறித்தது. தீபாவளிக்கு பின்னர் கூகுளில் அதிகமுறை பக்கோடா தேடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிலும், தமிழகத்தில் தான் அதிகமுறை தேடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. #Pakoda #TamilNews #Modi

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com