மெட்ரோ ரெயிலில் இருப்பது போன்று அனைத்து ரெயில்களிலும் அடுத்த ரெயில் நிலையம் பற்றிய டிஜிட்டல் அறிவிப்பு பலகைகளை நிறுவவேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு தயாநிதி மாறன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது
தயாநிதி மாறன் எம்பி, அனைத்து ரெயில்களிலும் டிஜிட்டல் காட்சிப் மற்றும் பொது அறிவிப்பு அமைப்புகளை நிறுவக் கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ரெயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி அவர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது
இந்திய ரெயில்களில் டிஜிட்டல் காட்சிப் பலகைகள் மற்றும் பொது அறிவிப்பு அமைப்புகள் போதிய அளவில் இல்லாத பயணிகளுக்கு தொடர்ந்து பெரும் சிரமத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி வருவது குறித்து கழகத் தலைவர் மு.க ஸ்டாவின் அவர்களில் வழிகாட்டுதலின்படி தங்களின் கவனத்திற்கும் கொண்டு வருகிறேன்.
தற்போது, பெரும்பாலான ரெயில் புறப்படும் இடம், இடைப்பட்ட நிலையங்கள் மற்றும் சேருமிடம் குறித்த அத்தியாவசியத் தகவல்களைப் பயணிகளுக்குத் தெரிவிக்கும் வகையிலான செயல்பாட்டு ஏறிட்டல் காட்சிப் பலகைகளே அல்லது பொது அறிவிப்பு அமைப்பு இல்லை 'சதாப்தி எக்ஸ்பிரஸ் போன்ற முதன்மை ரெயில்களில் கூட இத்தகைய அடிப்படை வசதிகள் இல்லை வந்தே பாரத் ரெயில்களில் மட்டுமே அந்த வசதிகள் காணப்படுகின்றன.
ஏற்கனவே இத்தகைய வசதிகள் பொருத்தப்பட்டிருந்த சில ரெயில்களில் கூட தற்போது காட்சிப் பலகைகளில் அறிவிப்பு அமைப்புகளும் செயல்படாத நிலையில் உள்ளன இதனால் இறங்குமிடம் பற்றிய குழுப்பங்களுக்கு பயணிகள் ஆழாகின்றனர். அதுமட்டுமல்ல இரவு நேரங்களில் இறங்கக்கூடிய பயணிகள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.ரெயில் போகும் வேகத்திற்கு எந்த ரெயில் நிலையத்தை கடக்கின்றோம் என்ற குழப்ப நிலையில் பயணிகள் பயணிகின்றனர்.
இது முறையான பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு இல்லாததையே உணர்த்துகிறது. இந்தகைய வசதிகள் இல்லாதது பயணிகளுக்கு குறிப்பாக முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் குழந்தைகள் மற்றும் வழித்தடங்கள் தெரியாத பணிகளுக்கு பெரும் இன்னல்களை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக, நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரப் பயணங்களின்போது, தாங்கள் எந்த நிலையத்தில் இருக்கிறோம் அடுத்த நிறுத்தம் எது. ரெயில் புறப்படும் நேரம் என்ன போன்ற முக்கியத் தகவல்கள் தெரியாமல் பயணிகள் மிகுந்த குழப்பத்திற்கும் சிரமத்திற்குஆமாகின்றனர் எந்த வருப்பில் பயணம் செய்தாலும் அல்லது எந்தவகை ரவிவாக இருந்தாலும் ஒவ்வொரு பயணியும் சரியான நேரத்தில் துல்லியமான பயணத் தகவல்களைப்ப
இது தொடர்பாக ரெயில்வே அமைச்சகத்தை தான் வலியுறுத்துவது எக்ஸ்பிரஸ், குப்பர் காஸ்ட் சதாப்தி மற்றும் பிற முதன்மை ரெயில்கள் உட்பட அனைத்துப் பயணிகள் ரெயில்களிலும் டிஜிட்டல் காட்சிப் பலகைகள் மற்றும் தானியங்கி பொது அறிவிப்பு அமைப்புகள் முழுமையாக நிறுவப்பட வேண்டும்.
ரெயில் புறப்படும் இடம், இடைப்பட்ட நிலையங்கள் மற்றும் சேகுவிடங்களில் ரெயில் புறப்பாடு, வருகை, அடுத்தடுத்த நிலையங்கள், திட்டமிடப்பட்ட திருத்தங்கள் மற்றும் லதாமதம் குறித்த நிகழ்நேர அறிவிப்புகள் மற்றும் காட்டுத் தகவல்களை வழங்க வேண்டும்.
தற்போது ரெயில் உள்ள காட்சிப் பலகைகள் மற்றும் அறிவிப்பு அமைப்புகள் குறித்து உடனடியாக தணிக்கை செய்து செயல்படாத அனைத்து உபகரணங்யுகுறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சரிசெய்து பயன்பாட்ற்கு கொண்டுவர வேண்டும்
இந்த வசதிகள் அனைத்தும் ரெயில் சேவையின் காலம் முழுவதும் தொடர்ந்து செயல்படுவதை உறுதிசெய்ய முறையான பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு நடைமுறையை ஏற்படுத்த வேண்டும்.
இந்த வசதிகள்,அனைத்து பொழிகளிலும், குறிப்பாக அந்தந்த மாநிலத்தின் மொழியிலும் கிடைக்கச்செய்ய வேண்டும்.
இந்த வசதிகளை ஒட்டுமொத்த பயணிகள் ரெயில்களிலும் செயல்படுத்துவதற்காக காலக்கெடுயுடன் கூடிய விரிவான செயல் திட்டத்தை உருவாக்குமாறு அமைச்சகத்திற்கு நீங்கள் அறிவுறுத்த வேண்டும் என்றும், இதற்கான கால அட்டவணை மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
என்று தெரிவித்துள்ளார்.