

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை-திண்டுக்கல் இடையே 8 பெட்டிகள் கொண்ட மெமு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. பயணிகள் நலனுக்காக இன்று மற்றும் நாளை இந்த ரெயில்கள் முன்பதிவு இல்லாமல் இயக்கப்படும். உடுமலை ரெயில் பயணிகள் சங்கம் இந்த ரெயிலை தொடர்ச்சியாக இயக்க கோரிக்கை விடுத்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் நலன் கருதி கோவை-திண்டுக்கல் இடையே இன்று மற்றும் நாளை முன்பதிவு இல்லாத 8 பெட்டிகளை கொண்ட மெமு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
அதன்படி, இன்று மற்றும் நாளை காலை கோவை ரெயில் நிலையத்தில் 9.35 மணி அளவில் புறப்படும் ரெயிலானது மதியம் 1.10 மணி அளவில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தை சென்றடையும். அதே போன்று திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் மதியம் 2 மணிஅளவில் புறப்படும் ரெயிலானது மாலை 5.50 மணிஅளவில் கோவை ரெயில் நிலையத்தை வந்தடையும்.
இந்த ரெயில் போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் ரெயில் நிலையங்கள் வழியாக செல்ல உள்ளது. இந்த ரெயிலை தொடர்ச்சியாக இயக்க வேண்டும் என்று உடுமலை ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.