கண்ணீருடன் அரசுக்கு ஆராய்ச்சி மாணவர் கேள்வி ? மாணவரின் கல்விக்கு எந்த இடையூறும் ஏற்படக்கூடாது - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்.!

அடிமையா இரு ,படிக்காதன்னு சொல்லிவிடுங்கள் என்று மாணவர் வீடியோ வெளியிட்டு அமைச்சர் வன்னியரசுக்கு கேள்விகளை முன்வைத்துள்ளார்.
udhayanidhi stalin
Published on

கண்ணீர் மல்க கேள்வி

அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், இந்த அரசு தனக்கான கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடித்ததை சுட்டிக்காட்டி இருந்த நிலையில், தற்போது இந்த ஆட்சியாளர்கள் அவருடைய கல்வியையே கேள்விக்குறியாக்குவதாக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் என்ன அடிமையா இரு படிக்காதன்னு சொல்லிடுங்கள் என்று வீடியோ வெளியிட்டு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிஅரசுக்கு கண்ணீருடன் கேள்வி எழுப்பியுள்ளார்

கண்டனம்

அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், ஆதரவாக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனங்களை பதிவு செய்துள்ளார்

இது குறித்து தனது சமூகவலைத்தளபதிவில் கூறப்பட்டுள்ளதாவது

சமூகநீதி நாளில் இப்படி ஒரு சமூக அநீதியை அரங்கேற்றி இருக்கும் சோபா மாடல் அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

தன்னுடைய தவறை மறைக்க அடுத்தவர் மீது பழிபோடும் இந்த ஆட்சியாளர்கள், அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வரவில்லை என்று சொன்ன மாணவரை குறிவைத்து நெருக்கடி தருவதும், கல்வியில் இருந்து வெளியேற்ற துடிப்பதும் கேவலத்தின் உச்சம்.

இடையூறு ஏற்படக்கூடாது

மாணவர் பாரதிதாசனை பழிவாங்க, அவருடைய கல்வியை பாழாக்கும் வேலையில் இந்த அரசு இறங்கி இருப்பது ஏற்க முடியாது.ரோஹித் வெமுலாவுக்கு நடந்த அதே கொடுமையை இந்த அரசு தனக்கு செய்கிறது என்று மனம் நொந்து பேசியிருக்கும் பாரதிதாசனின் கல்விக்கு எந்த இடையூறும் இந்த அரசு செய்யக்கூடாது.

அவருக்கு சேர வேண்டிய கல்வி உதவித்தொகை கிடைக்கவும் - அவரது ஆராய்ச்சி படிப்பு தொடரவும் இந்த ரீல்ஸ் அரசு துணை நிற்க வேண்டும்.

என் இவ்வாறு தனது பக்கத்தில் தெரிவித்துள்ளார்

X

Maalai Malar
www.maalaimalar.com