மீண்டும் பொன்னேரி தொகுதியை கைப்பற்றுமா காங்கிரஸ்? அப்பகுதி மக்கள் கூறுவது என்ன?

பொன்னேரியில் திமுகவிற்கே அதிக ஆதரவு உள்ளது.
மீண்டும் பொன்னேரி தொகுதியை கைப்பற்றுமா காங்கிரஸ்? அப்பகுதி மக்கள் கூறுவது என்ன?
Published on

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளநிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சிதறாமல் வலுவாக அப்படியே தொடர்கிறது என பலரும் தெரிவித்து வருகின்றனர்.

தொகுதிகள் குறைவாக கொடுக்கப்பட்டாலும், கொள்கைகளுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக போன்ற கூட்டணிக் கட்சிகள் மீண்டும் திமுகவே வெல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளன.

கூட்டணியைத் தாண்டி திமுகவின் சில திட்டங்களால் இம்முறையும் திமுகவே ஆட்சியைக் கைப்பற்றும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இம்முறையும் அதிமுக எதிர்க்கட்சியாக வரும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், தாங்கள் திமுகவிற்கு போட்டி எனக்கூறி வருகிறார் தவெக தலைவர் விஜய்.

தேர்தலையொட்டி மாலைமலர் தரப்பில் மக்களிடையே கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் பொன்னேரி பகுதியில் எடுக்கப்பட்ட கருத்துக்கேட்பில் திமுகவிற்கே அதிக ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது. இரண்டாம் இடத்தில் விஜய்யின் தவெக உள்ளது.

தற்போது பொன்னேரி சட்டமன்ற உறுப்பினராக காங்கிரஸின் துரை சந்திரசேகர் இருக்கிறார். இம்முறையும் திமுக இத்தொகுதியை காங்கிரஸிற்கே ஒதுக்கியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com