ஜோசியக்காரர் சொன்னால்தான் முதலமைச்சர் கோப்புகளைத் திறப்பாரா?- உதயநிதி கேள்வி

2021 தேர்தல் அறிக்கைப்படி சட்டசபை நிகழ்வை நேரலை செய்யாதது ஏன்?
TN CM Vijay- Udhayanithi stalin
Published on

சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி உரை

ஆளுங்கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் ஆதாரமின்றி குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்துள்ளோமா என்று சிந்திக்கும் வகையில் பேரவை நடக்கிறது.

முதலமைச்சர் முன் வைக்கப்பட்டுள்ள கோப்புகளை ஜோசியக்காரன் சொன்னால் தான் திறப்பாரா?

முதல்வர் முன் உள்ள ஊழல் தொடர்பான கோப்புகளை திறக்கலாம், உடனடி நடவடிக்கை எடுக்கட்டும்.

அமைச்சர் ஆதவ் உரை

நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறையினர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

நேர்மையான வெளிப்படைத்தன்மையான சட்டமன்றத்தை நடத்தக்கூடிய தைரியம் திமுகவுக்கு இல்லை.

2021 தேர்தல் அறிக்கைப்படி சட்டசபை நிகழ்வை நேரலை செய்யாதது ஏன்?

பெரும்பான்மை கட்சியாக தன்னை நிரூபித்த தவெகவுக்கு எந்த பயமும் இல்லை. சட்டசபை நிகழ்வுகளை நேரலை செய்யும் தைரியம் திமுகவுக்கு இல்லை.

அமைச்சர் ஆனந்த்

நாங்கள் சீரியல் பார்ப்பதில்லை, நாங்கள் சட்டசபை நேரலையை பார்க்கிறோம் என 70 வயது முதியவர் சொன்னார் -

யாரையும் கன்சல்ட் செய்யாமல் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கிறார் முதலமைச்சர் என்பதை மக்கள் அறிவர்.

சபாநாயகர்

கருத்து கூறும்போது அதனை ஒட்டி பாடல் பாடுவதில் எந்த தவறும் இல்லை, சூப்பர் சிங்கர் வார்த்தை அவசியம் இல்லை -

அமைச்சர் நிர்மல்குமார்

ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதை எல்லாம் தமிழ்நாடு பார்த்துவிட்டது.

உதயநிதி

நாங்கள் கேள்வி கேட்டால் நாங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு தான் ஆளுங்கட்சியினர் பதில் அளிக்கின்றனர்.

ஜோசியக்காரன் என்பது தவறான வார்த்தையல்ல, ஜோசியக்காரணை அரசு பணியில் நியமித்து நீக்கியது தவெக அரசு.

அவை குறிப்பில் இருந்து நீங்கள் நீக்கியவை எல்லாம் நேரலையில் டிவியில் ஒளிபரப்பப்பட்டு, ரீல்ஸ் ஆக பரவுகிறது.

முதல்வருக்கு ஓபன் சேலஞ்சாக சொல்கிறேன், கோப்புகளை திறந்து பார்க்கட்டும், ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும்.

சட்டசபையில் சினிமா பஞ்ச் டயலாக் பேசுவது போல் பேசக்கூடாது.

உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் திமுக பயப்படாது, ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் என்றார்.

அமைச்சர் ராஜ்மோகன்

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செய்யும் அனைத்தையும் கேமராமேன்கள் காட்ட வேண்டும் என சபாநாயகரிடம் அமைச்சர் ராஜ்மோகன் கோரிக்கை வைத்தார்.

அமைச்சர் ராஜ்மோகனின் கோரிக்கையை ஏற்று ஔிப்பதிவாளர்கள் திரையில் காட்டினர்.

ஆளுங்கட்சிக்கு சாதகமானவை மட்டுமின்றி முழுமையாக நேரலையாக தவெக அரசுதான் கொடுக்கிறது.

சபாநாயகர்

சட்டப்சபை நிகழ்வுகளில் நீக்கப்பட்ட காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டார் நடவடிக்கை எடுக்கப்படும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com