

தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் அருள் விக்னேஷ் மற்றும் ரவிசங்கர் மீது இதுவரை முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தகாத குறுஞ்செய்தி அனுப்பிய குற்றச்சாட்டில் த.வெ.க எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை இந்த டம்மி முதலமைச்சர் இன்னமும் பாதுகாப்பது ஏன்?
கோரிக்கை வைத்தவரை அடித்து துன்புறுத்திய துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?
இது ஆட்சியா? இல்லை, த.வெ.க-வினர் அத்துமீறுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அலங்கோல சிண்டிகேட்டா?
டம்மி முதலமைச்சருக்கு, தப்பு செய்யும் தன் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை.
ஆனால், அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் - த.வெ.க எம்.எல்.ஏ-க்களுடன் ஆலோசனைக்கூட்டம் என்று வேக வேகமாக திசைதிருப்பும் அரசியலில் இறங்குகிறார்.
ஆலோசனைக் கூட்டத்தில், அனல் கக்கினார் - அக்கினி குழம்பை அள்ளி ஊற்றினார் என்று ஆன்லைன் மாஃபியாவையும், Paid பேரில்லா பிச்சைகளையும் வைத்து ரீல்ஸ் ஓட்டினால் மக்கள் மறந்துவிடுவார்களா?
மவுன முதலமைச்சருக்கு மனசாட்சி இருந்தால் தவறு செய்யும் உங்கள் கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள். இல்லை மக்கள் சக்தி தட்டி வைக்கும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.