TN Assembly Election| பெரம்பூர் தொகுதியில் உங்கள் ஓட்டு யாருக்கு?- செல்போன் வழியாக த.வெ.க. ஓட்டெடுப்பு

பெரம்பூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது.
TN Assembly Election| பெரம்பூர் தொகுதியில் உங்கள் ஓட்டு யாருக்கு?- செல்போன் வழியாக த.வெ.க. ஓட்டெடுப்பு
Published on

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் யாருக்கு உங்கள் ஓட்டு என்கிற கணக்கெடுப்பில் தமிழக வெற்றி கழகம் ஈடுபட்டு உள்ளது.

நடிகர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் உங்கள் ஓட்டு யாருக்கு? என்று கேட்டு வாக்கெடுப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பெரம்பூர் தொகுதியில் உங்கள் ஓட்டு திமுக வேட்பாளருக்கா ? அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளருக்கா? தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கா? என கேட்டுவிட்டு இனி உங்கள் வாக்கை நீங்கள் பதிவு செய்யலாம் என்றும் குரல் பதிவு மூலமாக ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

பெரம்பூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது. ஆனால் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் எடுக்கப்படும் இந்த செல்போன் வாக்கெடுப்பில் நாம் தமிழர் கட்சியை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தி.மு.க., அதிமுக வேட்பாளர்களை மட்டுமே போட்டியாக கருதி குரல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com