தூய்மை பணியாளர்களை விட்டுக்கொடுக்க மாட்டோம் - போராட்டம் நடத்தியவர்களிடம் உறுதி அளித்த அமைச்சர்கள்

பழைய ஆட்கள் கஜானாவை காலி செய்துள்ள நிலையில், மக்கள் வரிப்பணத்தை கஜானாவில் சேர்த்து கோரிக்கையை நிறைவேற்றுவோம்.
தூய்மை பணியாளர்களை விட்டுக்கொடுக்க மாட்டோம் - போராட்டம் நடத்தியவர்களிடம் உறுதி அளித்த அமைச்சர்கள்
Published on
Summary

சென்னை ரிப்பன் மாளிகை வெளியே போராட்டம் நடத்தும் தூய்மை பணியாளர்களை அமைச்சர்கள் சந்தித்து பேசினர்.

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி 15 நாட்களுக்கு மேலாக தூய்மை பணியாளர்கள் சென்னை ரிப்பன் மாளிகை வெளியே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்களை அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், நிர்மல்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தூய்மை பணியாளர்களிடம் அமைச்சர் ஆனந்த் கூறியதாவது:

* முதலமைச்சர் விஜய் நிச்சயம் செய்வார் என்ற நம்பிக்கையில் சிரித்த முகத்துடன் அமைச்சர்களை வரவேற்றுள்ளீர்கள்.

* பல ஆண்டுகளாக போராடியும் யாரும் கேட்காத நிலையில் தற்போதைய முதல்வர் மக்கள் முதல்வராக செயல்படுவார்.

* பழைய ஆட்கள் கஜானாவை காலி செய்துள்ள நிலையில், மக்கள் வரிப்பணத்தை கஜானாவில் சேர்த்து கோரிக்கையை நிறைவேற்றுவோம்.

* சிரித்த முகத்தில் அமைச்சர்களாகிய எங்களை வரவேற்ற தூய்மை பணியாளர்களுக்கான அனைத்தையும் செய்வோம் என அவர் உறுதி அளித்தார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் நிர்மல் குமார் கூறியதாவது:

* இது உங்கள் அரசாங்கம்.

* தூய்மை பணியாளர்களுக்கு செய்யாமல் வேறு யாருக்கு செய்ய போகிறோம்.

* உங்களை வருத்திக் கொள்ள வேண்டாம், உங்களுக்கு செய்வதற்காக தான் இந்த தவெக அரசு உள்ளது என்று உறுதி அளித்தார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது:

* இது தூய்மை பணியாளர்கள் போராட்டம் அல்ல, மாநாடு போல் உள்ளது.

* 15 நாட்களாக யாருக்கும் இடையூறின்றி ராணுவ ஒழுக்கத்துடன் போராடிய தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டுகள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது:

* தூய்மை பணியாளர்கள் போராட இங்கே அமருவதால் முதல்வர் விஜய்க்கு தூக்கம் வருவதில்லை.

* போராடிய தூய்மை பணியாளர்களை திமுக ஆட்சியில் கைது, தற்போதைய முதல்வர் ஒருவர் மீதும் கைவைக்க கூடாது என கூறி உள்ளார்.

* ஆட்சி அமைந்து 100 நாட்கள் தான் ஆகிறது, எங்களுக்கு அவகாசம் தாருங்கள், தூய்மை பணியாளர்களை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com