தவறு செய்தவர் யாராக இருந்தாலும் நடவடிக்கை: உதயநிதி பேச்சுக்கு சட்டசபையில் அமைச்சர் ஆனந்த் பதிலடி!

உதயநிதி ஸ்டாலின் பேசிக்கொண்டு இருந்த போது அமைச்சர் புஸ்சி ஆனந்த் குறுக்கிட்டு பேசியதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
அமைச்சர் ஆனந்த்
அமைச்சர் ஆனந்த்
Published on
Summary

தவறு செய்தவர் யாராக இருந்தாலும் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று அமைச்சர் புஸ்சி ஆனந்த் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டசபையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. முதலில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தற்போதை ஆட்சியில் சட்டம் இருக்கிறது, ஆனால் ஒழுங்கு இல்லை, பெண்களுக்கு Tragedy ஆக ஆட்சி மாறிவிட்டது. தவெக அரசு ரிவர்ஸ் கியரில் தற்போது சென்று கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியின் திட்டங்களை தவெக அரசு ரத்து செய்தது ஏன்?

பாலியல் வழக்கில் கைதான தவெக பிரமுகர் தவெக எம்எல்ஏ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பெண்ணின் பாலியல் புகாரில் வழக்கு பதிவு செய்தும் தவெக நிர்வாகிகள் கைது செய்யப்படவில்லை என்று பேசினார்.

அப்போது நீர்வளத்துறை அமைச்சர் புஸ்சி ஆனந்த் குறுக்கிட்டு பேசியதாவது:-

த.வெ.க.வை சேர்ந்த பெண் பிரமுகர் கொடுத்த பாலியல் புகாரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர் யாராக இருந்தாலும் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். பெண் பிரமுகரிடம் அத்துமீறிய நபர் த.வெ.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். த.வெ.க பெண் அளித்த புகாரில் த.வெ.க. எம்.எல்.ஏ. சரவணனுக்கு தொடர்ப்பு இல்லை என தெரியவந்துள்ளது. தவெக ஆட்சியில் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

உதயநிதி ஸ்டாலின் பேசிக்கொண்டு இருந்த போது அமைச்சர் புஸ்சி ஆனந்த் குறுக்கிட்டு பேசியதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com