

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்தை ஆதரித்துப் பேசினார். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் அக்டோபர் 4ஆம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில், தவெக மற்றும் அதன் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
மதுராந்தக பிரசாரத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது
இந்த தேர்தல் எப்படி வந்தது ஏன் வந்தது என்று உங்களுக்கு தெரியும். இப்ப எப்படி உங்களை சந்திக்க வந்துள்ளேனோ அதைப்போலதான் ஏப்ரல் மாதம் அதிமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளரை ஆதரித்து இதே பகுதியில் பிரச்சாரம் செய்தேன். கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், அதிமுக தொண்டர்கள் என அனைவரும் இரவு பகல் பாராமல் உழைத்தோம் வெற்றிப்பெற்று எம்.எல்.ஏ ஆனார்கள், வெற்றிபெற்ற 12 நாட்களிலேயே அவர் பதவியை ராஜினாமா செய்வதற்கான காரணம் என்ன?
குதிரை பேரத்தின் வழியாக விலைபோய் விட்டார். நீங்கள் போட்ட ஓட்டை விற்று விட்டார் இது நியாயமா ? தர்மமா? நீதியா?, ஓட்டு போட்ட மக்களுக்கு அவர விசுவாசமாக இல்லை.தேர்தல் சமயத்தில் பணியாற்றிய கூட்டணி கட்சிகளுக்கு விசுவாசமாக இல்லை.ஆகவே விசுவாசமாக இல்லாத ஒருவர் மீண்டும் போட்டியிடுக்கிறார், அவரை தோற்கடித்து தேர்தல் மூலம் தகுந்த பாடத்தை புகட்டுவேண்டும்
ஒரு சட்டமன்ற உறுப்பினர் எதற்காக தேர்ந்தெடுக்கப்டுகிறார்? அவர் தொகுதி மக்களின் பிரச்சனையை பேசுவதற்காக வாய்ப்பை கொடுத்தார்கள்.ஆனால் அவர் தவெகவில் இணைந்து நமது வேட்பாளாருக்கு எதிராக நிற்கிறார், அவரை நீங்கள் டெபாசீட் இழக்க செய்ய வேண்டும்
இனி எவருக்கும் இப்படிபட்ட எண்ணம் வர கூடாது. அப்படிபட்ட தீர்ப்பை நீங்கள் வழங்க வேண்டும். ஆடு திருடுனா ஆடு திருடன் என்று சொல்கிறார்கள், கோழி திருடுனா கோழி திருடன் என்று சொல்கிறார்கள் அப்போ எம்.எல்.ஏ வை திருடினால் என்று விஜயை கடுமையாக சாடினார், நம்ம பொருளை அபகரித்ததற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் . ஜனநாயக கேலி கூத்தாக்கியவர் விஜய், இது ஜனநாயக படுகொலை யாரும் மன்னிக்க முடியாதது
விஜய் தூய சக்தி இல்லை , திருட்டு சக்தி, இவரின் ஆட்சியை காப்பற்றுவற்கு, தொடர்வதற்கு இப்படி ஒரு இழிவான செயலில் ஈடுப்பட்டு வருகிறார் எஎம்எல்ஏ பதவியை விற்றவர் தேர்தலில் நிற்கிறார்தவெக தலைவர் விஜய் முகத்தை பார்தால் வாக்கு விழும் என்கிறார்கள். பிறகு ஏன் வீ வீதியாக செல்கிறார்? விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த திறனற்ற அரசுக்கு மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும்.