தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் ரெய்டு

சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீடு, அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.
கே.என்.நேரு
Published on: 
Summary

தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிா்வாகத் துறையில், 2,538 உதவிப் பொறியாளா்கள் மற்றும் இளநிலைப் பொறியாளா்கள் உள்ளிட்ட அலுவலா்கள் நியமனத்துக்கு 634 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் பேரில் கே.என்.நேருவுக்கு சொந்தமான திருச்சி தில்லை நகர் 5-வது குறுக்கு தெருவில் உள்ள வீடு மற்றும் சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீடு, அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

3 வாகனங்களில் வந்த 15 அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேரு வீட்டில் நடைபெறும் சோதனை குறித்து தகவல் அறிந்த தி.மு.க. தொண்டர்கள் சோதனை நடைபெறும் இடங்களில் குவிந்து வருகின்றனர்.

இதனால் அப்பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com