

த.வெ.க. எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்காததையும், முதலமைச்சரின் மௌனத்தையும் சுட்டிக்காட்டிய உதயநிதி ஸ்டாலின், குற்றச்சாட்டுகளை மூடி மறைக்க முயற்சிக்கும் தலைமை செயலாளரின் செயல்பாடுகள் மீது நடவடிக்கை தேவை என வலியுறுத்தினார். வழக்கை சிபிஐக்கு ஒப்படைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை கைது செய்யக்கோரி சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மனு ஒன்றை அளித்தார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்,
* த.வெ.க. அரசின் சிங்கப்பெண் படையை எங்காவது பார்த்துள்ளீர்களா? அவர்களுக்கு என்ன பயிற்சி அளித்துள்ளீர்கள்?
* தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு நிலை குறித்து பல முறை பேசியுள்ளோம், இதுவரை முதலமைச்சர் பதிலளிக்கவில்லை.
* டைம் டிராவல் செய்து சம்பந்தம் சம்பந்தமே இல்லாமல் சபையில் முதலமைச்சர் விஜய் பதிலளித்தார்.
* வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோரில் 75 சதவீதம் பேர் ஆளுங்கட்சி நிர்வாகிகளாகவே உள்ளனர்.
* பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் த.வெ.க. மாவட்டச் செயலாளர் உள்ளிட்டோர் ஈடுபடுகின்றனர்.
* உச்சபட்சமாக பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கே ஆளுங்கட்சி எம்எல்ஏ தொடர்ந்து ஆபாச மெசேஜ் அனுப்பியுள்ளார்.
* மதுபோதையில் ஆட்சியர் குடியிருப்புக்கே சென்று அட்டகாசம் செய்வது இந்தியாவிலேயே நடந்ததில்லை.
* ஒரு எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய கேவலமான செயல் இந்திய வரலாற்றில் இதற்கு முன்பு நடந்தது கிடையாது.
* ஹனிமூன் காலம் எனக்கூறியதை அதே அர்த்தத்தில் த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் எடுத்து கொண்டுள்ளார்.
* பாதிக்கப்பட்டவரை தாக்கி தரக்குறைவாக விமர்சிக்கின்றனர் அப்யூசிவ் விர்சுவல் வாரியர்ஸ்.
* 116 நாட்களுக்கு முன்னரே தலைமை செயலாளரிடம் ஆட்சியர் புகார் அளித்துள்ளார்.
* பணியிடம் மாறுமாறு ஆட்சியரிடம் பேரம் பேசியுள்ளார் தலைமைச் செயலாளர்.
* ஆட்சியர் புகார் குறித்து முதலமைச்சரிடம் தெரிவித்தாரா தலைமை செயலாளர்?
* தலைமை செயலாளர் கூறியிருந்தால் தற்போது வரை முதலமைச்சர் அமைதியாக இருந்தது ஏன்?
* குற்றத்தை மூடி மறைக்க முயன்றுள்ளார் தலைமை செயலாளர். இதனால் தலைமை செயலாளர் மீதும் நடவடிக்கை தேவை. குற்றம் சாட்டப்பட்டவர் பட்டியலில் தலைமை செயலாளரை சேர்க்க வேண்டும்.
* பொய் சொல்வதற்காகவே த.வெ.க. அமைச்சரவையில் வைக்கப்பட்டுள்ள சங்கி அமைச்சர் சம்பந்தமே இல்லாத பதில் தருகிறார்.
* தற்போது வரை சட்டமன்ற உறுப்பினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
* FIR பதிவதற்கே 116 நாட்கள் ஆகி உள்ள நிலையில் முதலமைச்சர் தூங்கி கொண்டிருந்தாரா?
* வீட்டிற்கு மனு அளிக்க வந்தவரை கண்மூடித்தனமாக தாக்கிய துணை சபாநாயகர் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை.
* மாற்றம் மாற்றம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த தவெக அரசை பார்த்து துர்நாற்றம் என மக்கள் பேசுகின்றனர்.
* முதலமைச்சர் மீதும் தவெக அரசு மீதும் நம்பிக்கையில்லை என்பதால் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினார்.