நீலகிரிக்கு சுற்றுலாப் பயணிகள் வர வேண்டாம் - கலெக்டர் வேண்டுகோள்

நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்துவருவதால் சாலைகளில் மரங்கள் விழுந்தும் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.
மண்சரிவு
Published on: 
Summary

மிக கனமழை பெய்யும் என முன்னறிவிப்பு உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருவதை தவிர்க்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய வானிலை ஆய்வு மையம் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று (23.10.2026) இரவு முதல் நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்துவருவதால் சாலைகளில் மரங்கள் விழுந்தும் மண்சரிவுகள் ஏற்பட்டும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளதால் நீலகிரி மாவட்டத்திற்கு வருகைபுரியும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும், மிக கனமழை பெய்யும் என முன்னறிவிப்பு உள்ளதால் அடுத்த மூன்று நாட்களுக்கு வானிலை சீராகும் வரை நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிவதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com