Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 5 செப். 2026...

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
Live news

தமிழ்நாட்டில் மக்களுக்கு பாதுகாப்பு உள்ளது... ஊழல்வாதிகளுக்கு தான் இல்லை - அமைச்சர் நிர்மல்குமார்

* திமுக, அதிமுக, பாஜக என அனைத்து கட்சிகளும் இணைந்து வரும் தேர்தலை எதிர்கொள்ளும்.

* நாள்தோறும் 7 முதல் 8 மணி நேரம் சட்டசபை நடைபெறுகிறது.

சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல்

* காகா கலேல்கர் தலைமையிலான முதலாம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தயாரித்த அந்தப் பட்டியலில் மொத்தம் 2399 சாதிகள் இடம் பெற்றிருந்தன.

* ஒரு காலத்தில் பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்டிருந்த தாசரி, ஜங்கம் போன்ற வகுப்பினர் மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி தான், 1993-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஓபிசி பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

GOLD PRICE TODAY: நகை வாங்குவோருக்கு குட் நியூஸ்... அதிரடியாக குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 குறைந்து ரூ.14,190-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

ஆசிரியர்களின் மகத்தான பணிகளைப் போற்றுவோம்- முதலமைச்சர் விஜய்

* மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்காகத் தன்னலம் கருதாது பணியாற்றிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!

* ஆசிரியர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பும், சிறந்த வழிகாட்டுதலும் நமது மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தை மேலும் ஒளிமயமாக்கட்டும்!

தவெக அரசின் பூச்சாண்டிகளுக்கு அஞ்ச மாட்டோம்- மு.க.ஸ்டாலின்

* உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது; சட்டமன்றக் கூட்டத்தொடரும் நடந்துகொண்டிருக்கிறது.

* இந்திய ஐனநாயகத்தின் இருண்ட பக்கமாய் இந்தப் போக்கு தொடரும் நிலையில் வழக்கம்போல் திசைதிருப்பும் நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது இந்த ரீல்ஸ் அரசு.

மாணவர்களை நல்ல மனிதர்களாக வளர்த்தெடுக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்- மு.க.ஸ்டாலின்

* மாணவர்களை நல்ல மனிதர்களாக வளர்த்தெடுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்!

* சரியான கேள்விகளைக் கேட்கும் தலைமுறையை உருவாக்குவதே இனி ஆசிரியர்களின் பெரும் பணி!

தியாகத் திருவுளம் வ.உ. சிதம்பரனார்..!- மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

* வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளில், அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன்.

* வ.உ.சிதம்பரனாரின் வீரத்தையும், தேசப்பற்றையும், தியாகத்தையும் இந்நாளில் நினைவுகூர்ந்து போற்றுவோம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து - தொழிலாளி உயிரிழப்பு

* சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தில் உள்ள சின்னதம்பி பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

* அடுத்தடுத்து வெடிச்சத்தம் கேட்பதாலும் வெடித்து சிதறுவதாலும் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

* அபிராமபுரத்தில் உள்ள கே.என்.நேரு சகோதரர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

* மயிலாப்பூர், ஆர்.ஏ.புரம், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com