
சட்டசபையில் ஜெயலலிதா பட்ட அவமானங்கள் நமக்கு தெரியும்- முதலமைச்சர் விஜய்
பழிவாங்கும் எண்ணத்தில் நான் அரசியலுக்கு வரவில்லை, அப்படி நினைத்தால் அதற்கு நான் பொறுப்பில்லை- முதலமைச்சர் விஜய்
பெண்கள் குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசுவதை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்- முதலமைச்சர் விஜய்
ஒரு எம்எல்ஏ ஆர்தோ சர்ஜன் போல் பேசுகிறார், சட்டமன்றத்தில் எலும்பை உடைப்பாராம்- முதலமைச்சர் விஜய்
பெண்கள் உட்பட அனைவரையும் தரம் தாழ்ந்து பேசுவதை தவிர்க்க வேண்டும்- முதலமைச்சர் விஜய்
கருத்துரிமை, பேச்சுரிமையை எந்த அளவுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதை யோசிக்க வேண்டும்- முதலமைச்சர் விஜய்
அரசியலுக்காக தனிப்பட்ட முறையில் பெண்களை தரம் தாழ்ந்து பேச வேண்டாம் என முதலமைச்சர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை துறை வாரியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்- முதலமைச்சர் விஜய்
குற்றம் தெருவில் மட்டுமல்ல இணையத்திலும் நடைபெறுவதால் குற்றம் நடக்கும் முன்பே கண்டறிந்து தடுப்பது அவசியம்- முதலமைச்சர்
காவல்நிலையத்தில் உயிரிழப்பு என்பது சாதாரணமான நிகழ்வு அல்ல, காவல்துறை மீதான நம்பிக்கையை பாதிக்கும் பிரச்சனை- முதலமைச்சர்
போதைப்பொருள் தடுப்புப்படை நடவடிக்கைகளால் போதை என்கிற மரத்தின் ஒரு சில கிளைகளை அகற்றி இருக்கிறோம்- முதலமைச்சர் விஜய்
காவலில் எந்த மரணம் நடைபெற்றாலும் எந்த ஒரு பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்- முதலமைச்சர் விஜய்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக எந்த ஒரு குற்றம் நடைபெற்றாலும் நடவடிக்கை அறிவுறுத்தப்பட்டுள்ளது- முதலமைச்சர் விஜய்
போதைப்பொருள் கலாச்சாரம் கடந்த ஆட்சியாளர்கள் கவனிக்காமல் இருந்ததால் தற்போது ஆழமாக வேரூன்றி நிற்கிறது- முதலமைச்சர்
ஊழலற்ற நேர்மையான ஆட்சி செய்வதே தவெக அரசின் நோக்கம், அரசு ஊழியர்கள் ஊழல் செய்வதை ஏற்க முடியாது- முதலமைச்சர் விஜய்
குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் வலுவான சைபர் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கப்பட வேண்டும்- முதலமைச்சர் விஜய்
கோவை அமுதன் கொலை, சென்னை தனுஷ்குமார் கொலை சம்பவத்தில் 36 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்- முதலமைச்சர் விஜய்
குற்றத்திற்கு போதை கலாச்சாரம் காரணம் என ஒற்றை வார்த்தை கூறி தப்பிப்பது நல்ல பண்பு அல்ல- முதலமைச்சர்
2021 முதல் 2025 வரை நடைபெற்ற குற்றச் சம்பவங்களை கூறி ஒதுங்கிச் செல்ல எனது மனம் இடம் தரவில்லை- முதலமைச்சர் விஜய்
பள்ளி மாணவர்கள் தொடங்கி அனைவருக்கும் டிஜிட்டல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்- முதலமைச்சர் விஜய்
ஒவ்வொரு காவல் நிலையங்களும் தங்களுக்கு எல்லைக்குட்பட்ட மக்களின் நெருக்கமான தொடர்பாக ஏற்படுத்த வேண்டும்- முதலமைச்சர் விஜய்
சொத்து தகராறு, பழிவாங்கும் மனப்பான்மை கூட குற்றத்திற்கான காரணமாக இருக்கலாம்- முதலமைச்சர் விஜய்
அனைத்து குற்றங்களும் கடந்த 100 நாட்களில் தோன்றியதல்ல- முதலமைச்சர் விஜய்
ஒவ்வொரு குற்றத்திற்கு பின்னும் குடும்ப பிரச்சனை, போதைப்பொருள் பயன்பாடு இருக்கலாம்- முதலமைச்சர் விஜய்
எதிர்க்கட்சியினர் கூறிய கருத்தாக இருந்தாலும் அதில் உண்மை உள்ளதா என ஆராய்ந்து சரி செய்வதில் பாகுபாடில்லை- முதலமைச்சர் விஜய்
யாரிடமும் சார்பின்றி நடுநிலை தவறாது நீதி வழங்குவதே சரியான ஆட்சி என திருவள்ளுவர் கூறியுள்ளார்- முதலமைச்சர் விஜய்
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராயினும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதே த.வெ.க. அரசின் நிலைப்பாடு- முதலமைச்சர் விஜய்
சட்டத்தை மதித்து நடப்பவர்களுக்கு காவல்துறை உற்ற நண்பராக இருக்க வேண்டும்- முதலமைச்சர் விஜய்
சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்தால் தொழில் முதலீடு வரும், தொழில்கள் முறையாக நடைபெறும்- முதலமைச்சர் விஜய்
சாலைகள், ஆலைகள் அமைப்பதால் மாநிலத்தின் வளர்ச்சி தீர்மானிக்கப்படுவதில்லை- முதலமைச்சர் விஜய்
காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் பதிலுரை தொடங்கியது.
2026-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் இரண்டாம் திருத்த சட்டமுன்வடிவை அறிமுகம் செய்தார் அமைச்சர் ஆனந்த்
எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு கோரி முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் அரசினர் சட்ட முன்வடிவு அறிமுகம் செய்தார் அமைச்சர் செங்கோட்டையன்- இதனை தொடர்ந்து சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.
3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று மீண்டும் கூடியது.
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து கேள்வி எழுப்புவோம் - திமுக கொறடா எ.வ.வேலு திட்டவட்டம்
சட்டசபைக்கு உறுப்பினர்கள் வருகை.
காவல்துறை மானியக்கோரிக்கை மீது முதலமைச்சர் விஜய் பதிலுரை அளிக்க உள்ளார்.
3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது.