ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைவு

தங்கம் விலை கிராமுக்கு ரூ.165 குறைந்து ரூ.7,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைவு
Published on

சென்னை:

தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) 31-ந் தேதி வரை விலை அதிகரித்து வந்தது. அன்றைய தினம் ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 455-க்கும், ஒரு பவுன் ரூ.59 ஆயிரத்து 640-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சமாக இது பார்க்கப்பட்டது.

மேலும் விலை அதிகரித்து ரூ.60 ஆயிரத்தையும் தாண்டிவிடுமோ? என்று நினைத்த நேரத்தில், தங்கம் விலை குறைந்தது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ.57 ஆயிரத்து 600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.165 குறைந்து ரூ.7,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.102-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

06-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,920

05-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,840

04-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,960

03-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,960

02-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,960

 கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

06-11-2024- ஒரு கிராம் ரூ. 105

05-11-2024- ஒரு கிராம் ரூ. 105

04-11-2024- ஒரு கிராம் ரூ. 106

03-11-2024- ஒரு கிராம் ரூ. 106

02-11-2024- ஒரு கிராம் ரூ. 106

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com