டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

நாளை முதல் நவம்பர் 11-ம் தேதி வரை விண்ணப்பங்களில் தேவையான திருத்தங்களைச் செய்து கொள்ளலாம்.
TNPSC Group-4
Published on: 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் இன்று நள்ளிரவு 11.59 மணி வரை டி.என்.பி.எஸ்.சி. அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.tnpsc.gov.in/ மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்த பிறகு, விண்ணப்பதாரர்கள் தங்கள் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அவற்றைத் திருத்தம் செய்வதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை முதல் நவம்பர் 11-ம் தேதி வரை விண்ணப்பங்களில் தேவையான திருத்தங்களைச் செய்து கொள்ளலாம்.

வரவிருக்கும் குரூப்-4 தேர்வு எதிர்வரும் 2027-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் தேதி அன்று நடத்தப்பட உள்ளது. அன்று காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இத்தேர்வு நடைபெறும் என தேர்வாணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுள்ள தேர்வர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

X