தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

வடகிழக்கு பருவமழை, சமூக நீதி சர்வே எடுப்பது, அமைச்சர்களின் துறை ரீதியான செயல்பாடுகள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய்
Published on: 
Summary

முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியுள்ளது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், அரசு செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

முக்கிய ஆலோசனை

தொழில் முதலீடுகள், நிர்வாகம் மற்றும் கொள்கை ரீதியான முடிவுகளை எடுப்பது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. புதுப்பித்தக்க எரிசக்தி கொள்கை திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு உள்ளது.

மேலும், வடகிழக்கு பருவமழை, சமூக நீதி சர்வே எடுப்பது, அமைச்சர்களின் துறை ரீதியான செயல்பாடுகள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com