Tamilnadu Assembly Live: அரசியல் வரலாற்றில் முதல் முறையாக த.வெ.க. அரசு ஆட்சியில் அதிகாரத்திலும் பங்கு- கவர்னர் புகழாரம்

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக ஆட்சியின் முதல் சட்டசபை கூட்டம் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் கவர்னர் அர்லேகர் உரையாற்றினார்.
Tamilnadu Assembly Live: அரசியல் வரலாற்றில் முதல் முறையாக த.வெ.க. அரசு ஆட்சியில் அதிகாரத்திலும் பங்கு- கவர்னர் புகழாரம்

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், சட்டமன்றத்திற்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வருகை

சட்டசபையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்க்கட்சிகள் வரிசையில் 5-வது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.

கவர்னர் உரையை வாசித்து முடித்ததும் அந்த உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் வாசிப்பார். அதோடு அவை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பாகும்.

கவர்னரை சிவப்புக் கம்பள விரிப்பில் சட்டசபைக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் சாந்தி அழைத்து வருவார்கள். அவைக்கு வந்ததும் காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைக்கப்படும். அதன் பின்னர் உரையை ஆங்கிலத்தில் கவர்னர் அர்லேகர் வாசிப்பார்.

இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூடும் நிலையில், கவர்னர் அர்லேகர் 9.50 மணிக்கு வருகை தருவார். அவருக்கு கோட்டை பிரதான கட்டிடத்தின் 2-வது நுழைவு வாயில் அருகே போலீஸ் வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்படும். சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், சட்டசபை செயலாளர் சாந்தி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து கவர்னரை வரவேற்பார்கள்.

தமிழக சட்டசபைக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வருகை.

தமிழக சட்டசபைக்கு வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.

'வாயத் திறங்க CM' என்ற வாசகத்துடன் கூடிய கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக சட்டசபை உறுப்பினர்கள் சட்டசபைக்கு வந்தனர்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு வருகை

சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் விஜய் வருகை

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர்... காவலர்களின் மரியாதையை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் JCD பிரபாகர்

சட்டசபையில் முக்கிய பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்.

தமிழக சட்டசபை கூட்டம்- கவர்னர் அர்லேகர் சட்டசபைக்கு வருகை

சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், சட்டசபை முன்னவர் செங்கோட்டையன் ஆகியோர் கவர்னரை வரவேற்றனர். அதனை தொடர்ந்து காவல்துறை மரியாதை அளிக்கப்பட்டது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தமிழக 17-வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது.

வணக்கம் என தமிழில் கூறி உரையை தொடங்கினார் கவர்னர் அர்லேகர்

ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள் எனும் அண்ணா உரையை சுட்டிக்காட்டி கவர்னர் பேசினார். மக்களின் தேவைகளை சட்டசபையில் விவாதிப்பீர்கள் என நம்புகிறேன்- கவர்னர்

கொள்கை தலைவர்கள் பெயர்களை உச்சரிப்பதில் தவறு நேர்ந்திருந்தால் பிழை பொறுக்க வேண்டும்- கவர்னர்

தமிழக அரசியல் வரலாற்றில் விசில் புரட்சியை முதலமைச்சர் விஜய் கொண்டு வந்துள்ளார்- கவர்னர்

1977-ம் ஆண்டில் எம்ஜிஆர் ஏற்படுத்திய அரசியல் புரட்சியை போல 2026-ம் ஆண்டில் விஜய் புரட்சியை ஏற்படுத்தி உள்ளார்- கவர்னர்

தமிழக வெற்றிக்கழகம் சாதி, மதம், இனம் என்று வேறுபாடுகளையும் பண பலத்தையும் மீறி வெற்றி பெற்று உள்ளது- கவர்னர்

தமிழகத்தில் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக த.வெ.க. அரசு ஆட்சியில் அதிகாரத்திலும் பங்கு அளித்துள்ளது- கவர்னர்

தேசிய நெடுஞ்சாலை மற்றும் உட்கட்டமைப்புகளக்கு மத்திய அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது. ஓசூர், கோவை, மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

மேகதாது அணையை கட்ட அனுமதிக்க கூடாது என பிரதமரை வலியுறுத்தி உள்ளார் விஜய்- கவர்னர்

தமிழக மீனவர்களின் நலன் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் மோடியை சந்தித்த போது முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.

ஓசூர் விமான நிலையம் கட்ட அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை முதலமைச்சர் விஜய் பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளார்.

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் வகையில் ஆட்சி இருக்கும்- கவர்னர் உரை

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் நிதி நிலைமை மோசமாக உள்ளது- கவர்னர் உரை

முதலமைச்சராக பொறுப்பு ஏற்றது முதல் முதலமைச்சர் மாநிலத்தின் நிதி நிலைமையை சீராக்க நடவடிக்கை எடுத்து உள்ளார்- கவர்னர் உரை

தமிழகத்தில் வருவாய் பற்றாக்குறை சுமார் 78ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் நிதி வருவாய் முந்தையை நிதி ஆண்டுகளை விட குறைந்து உள்ளது.

தமிழக அரசு நிதி நெருக்கடியில் இருந்தாலும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து உள்ளார்- கவர்னர் உரை

நிதி பகிர்வில் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு இழைக்கும் அநீதி குறித்து விரைவில் அறிக்கை வெளியிடப்படும்- கவர்னர் உரை

கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரித்து உள்ளது.

கடந்த ஆட்சி போதை பொருள் புழக்கத்தை தடுக்க போதிய நடவடிக்கை எடுக்கவில்லை- கவர்னர் உரை

இந்த அரசு போதைப்பொருள் புழக்கத்தை ஒடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கும்- கவர்னர் உரை

மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்- கவர்னர் உரை

டாஸ்மாக்கில் ஊழல் மூலம் திரட்டப்படும் நிதியை தடுத்து அரசு கஜானாவுக்கு திருப்பப்பட்டு உள்ளது- கவர்னர் உரை

இந்த அரசு ஆட்சியில் இருக்கும் வரை விவசாயிகள் நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண் எடுக்க இலவச அனுமதி அளிக்கப்படும்- கவர்னர் உரை

கனிம வள கொள்ளையை தடுக்க அரசு இரும்புக்கர நடவடிக்கை எடுக்கும்- கவர்னர் உரை

18,274 ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்படும்- கவர்னர் உரை

அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் ஒழிக்கப்பட்டு உள்ளது. இடைத்தரகர் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது- கவர்னர் உரை

மத்திய அரசு மேற்கொள்ளும் மக்கள் தொகை கணக்கெடுப்பை முடித்த பின் மாநில அரசு சமூக நீதி கணக்கெடுப்பை மேற்கெள்ளும்- கவர்னர் உரை

தமிழகத்தில் அறிஞர் அண்ணாவின் ஆட்சிக்கு பின் இருமொழி கொள்கை தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது- கவர்னர் உரை

இருமொழிக் கொள்கையே இந்த அரசும் தொடர்ந்து பின்பற்றும்- கவர்னர் உரையில் அறிவிப்பு

மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை மூலம் மும்மொழி கொள்கையை அமல்படுத்துவதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

பொது பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர இந்த அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.

மும்மொழி கொள்கையை வலியுறுத்தி மாநிலத்திற்கான கல்வி நிதியை மத்திய அரசு மறுக்கக்கூடாது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு கிடைத்த பின்னருடம் கூட காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீர் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது- கவர்னர் உரை

காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீர், உரிய நேரத்தில் கிடைக்க இந்த அரசு தேவையான நடவடிக்கை எடுக்கும்- கவர்னர் உரை

மாநிலத்தில் உள்ள குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை பராமரிக்க உரிய திட்டம் அமல்படுத்தப்படும்- கவர்னர் உரை

முல்லைபெரியாறு அணைத் திட்டம் தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு உரிய ஒன்றாகும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பின்னும் பெரியாறு அணையை பலப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு கேரள அரசு அனுமதி அளிக்க மறுக்கிறது- கவர்னர் உரை

முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்ட கேரள அரசு எடுக்கும் முயற்சிகள் முறியடிக்கப்படும்- கவர்னர் உரை

தமிழகத்தில் அகழாய்வு நடைபெறும் ஊர்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பாரம்பரிய சுற்றுலா, சுகாதார சுற்றுலாவை சர்வதேச தரத்திற்கு மாற்ற இந்த அரசு நடவடிக்கை எடுக்கும்.

அயல்நாட்டு முதலீடுகளை ஈர்க்க புதிய தொழில் கொள்கை வெளியிடப்படும்- கவர்னர் உரை

சிறு, குறு தொழில்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஒற்றை சாளர முறையில் தொழில் தொடங்க அனுமதி வழங்கப்படும்- கவர்னர் உரை

நகர்மயமாக்கலில் தமிழ்நாடு பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது- கவர்னர் உரை

2036-க்குள் தமிழ்நாட்டை 1.5 லட்சம் டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக்க நடவடிக்கை- கவர்னர் உரை

2031-ல் நகரமயமாதலில் இந்தியாவிற்கு முன்னுதாரண மாநிலமாக தமிழ்நாடு உருவெடுக்கும்- கவர்னர் உரை

தமிழ்நாட்டின் 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்ந்து காப்பாற்றப்படும்- கவர்னர் உரை

மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்க இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்- கவர்னர் உரை

விளையாட்டு துறையில் தமிழகத்தில் சர்வதேச தரத்திற்கு உயர்த்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்- கவர்னர் உரை

வெற்றி தமிழகம் என்ற பெயரில் அடுத்த 5 ஆண்டுகளுக்கான திட்டம் அமல்படுத்தப்படும்- கவர்னர் உரை

மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த அரசு நடவடிக்கை எடுக்கும்- கவர்னர் உரை

அறநிலையத்துறைக்கு சொந்தமான சொத்துக்கள் டிஜிட்டல் முறையில் அளவிடப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்- கவர்னர் உரை

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்வில் கவர்னர் ஆற்றிய உரை முழு விவரம்:-

Attachment
PDF
TNLA -Hon'ble Governor Speech-Tamil-Part 1 -Date 18.06.2026
Preview
Attachment
PDF
TNLA -Hon'ble Governor Speech-Tamil-Part 2 -Date 18.06.2026
Preview

தமிழக சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர், ஆளுநரின் உரையை தமிழில் மொமி பெயர்த்ததை தொடர்ந்து, தேசிய கீதத்துடன் இன்று 17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நிறைவு.

X

Maalai Malar
www.maalaimalar.com