மாநில சுயாட்சி குரலை ஓங்கி ஒலிக்க வலியுறுத்தினோம்- முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி

த.வெ.க.வுடன் இணைந்து 100 நாட்கள் தான் ஆகிறது, தொடர்ந்து இணைந்து செயல்படுவோம் என மாநாட்டில் உறுதி செய்துள்ளோம்.
திருமாவளவன்
திருமாவளவன்
Published on

மாநில சுயாட்சி குரலை ஓங்கி ஒலிக்க வேண்டும், அதனை வலுவாக முன்னெடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தினேன்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்து பேசினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது:-

* அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது தொடர்பான தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்தேன்.

* விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முதலமைச்சரிடம் வழங்கினேன்.

* த.வெ.க. ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவு எப்போதும் உண்டு என முதலமைச்சரிடம் கூறினேன்.

* மக்களின் பார்வையில் தான் முடிவு எடுக்கிறோம், கட்சியின் நலனுக்காக முடிவெடுப்பதில்லை.

* மாநில சுயாட்சி குரலை ஓங்கி ஒலிக்க வேண்டும், அதனை வலுவாக முன்னெடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தினேன்.

* மேகமலை மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தினேன்.

* போதைப்பொருள் ஒழிப்பில் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது.

* போதைப்பொருள் ஒழிப்பு அதிரடிப்படையை உருவாக்க முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை வைத்தேன்.

* போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முதலமைச்சர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினேன்.

* த.வெ.க.வுடன் கைகோர்த்துள்ளோம், கூட்டணி அமைச்சரவையில் இணைத்துக்கொண்டுள்ளார்கள். சட்டமன்ற கூட்டத்துக்குப் பின் த.வெ.க. கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெறும்.

* த.வெ.க.வுடன் இணைந்து 100 நாட்கள் தான் ஆகிறது, தொடர்ந்து இணைந்து செயல்படுவோம் என மாநாட்டில் உறுதி செய்துள்ளோம்.

* அமைச்சரவையில் இடம்பெற்றதன் மூலம் விசிகவுக்கும் ஆளுங்கட்சி என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com