உருவக்கேலி பேச்சால் மு.க.ஸ்டாலின் உரையின் சாரம்சமே மாறிவிட்டது..!- சவுமியா அன்புமணி

யாராக இருந்தாலும் யாரையும் உருவக்கேலி செய்யக்கூடாது.
Sowmya anbumani
Published on: 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பல நல்ல கருத்தகள் பேசிய நிலையிலும் அந்த ஒரு உருவக்கேலியால் மொத்த பேச்சின் சாரம்சமும் மாறிவிட்டது என்று பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி பேட்டி அளித்தார்.

அப்போது, இந்த உருவத்தை வைத்துக்கொண்டு சத்தியபாமா எப்படி பல்டி அடித்தார் எனத்தெரியவில்லை என முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

மு.க.ஸ்டாலின் பல நல்ல கருத்தகள் பேசிய நிலையிலும் அந்த ஒரு உருவக்கேலியால் மொத்த பேச்சின் சாரம்சமும் மாறிவிட்டது. யாராக இருந்தாலும் யாரையும் உருவக்கேலி செய்யக்கூடாது.

முதலமைச்சர் விஜய் பரப்புரையின்போது பெரிய பாமக கொடியுடன் இருந்த நபர் யார் என்று தெரியவில்லை.

முதலமைச்சர் விஜய் பரப்புரைக்கு பாமக கொடியுடன் சென்ற நபர் பாமக வேட்டியுடன் இருந்தாரா என பார்க்க வேண்டும்.

மாணவர் விடுதிகளில் வழங்கும் உணவில் இறைச்சியைவிட காய்கறி உணவு தருவதுதான் பாதுகாப்பானது.

இறைச்சியை பிரிட்ஜில் வைத்து பராமரிக்காவிடில் கெட்டுப்போகும். மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படும்.

விடுதி மாணவர்களுக்கு இறைச்சியை பாதுகாப்பாக சமைத்து தர முடிந்தால் கொடுக்கலாம். அதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன என்றார்.

விடுதி மாணவர்களுக்கு மாட்டிறைச்சி வழங்குவது குறித்து அமைச்சர் வன்னி அரசு பேசியிருந்த நிலையில் எம்எல்ஏ சவுமியா கருத்து தெரிவித்துார்.

X

Maalai Malar
www.maalaimalar.com