அக்டோபர் 4-ம் தேதி, தாராபுரத்தில் தேர்தல் பரப்புரைக்குத் தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது. இடைத்தேர்தல் சமயத்தில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியது.முதலமைச்சரின் ரோடு ஷோ நடந்த சாலையில் மறியலில் ஈடுபட்டது உள்ளிட்ட புகார்களின் பேரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நாதக வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்
இவரின் இந்த நடவடிக்கைக்கு தேமுதிக கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து தேமுதிக தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது
இடைத்தேர்தல் தமிழர் கட்சியின் வேட்பாளர் எம்.கார்த்திகா அவர்களை அதிகாலை 5.30 மணியளில், அவர் இரவு உடையான நைட்டியின் இருந்தபோது, உடை மாற்றிக்கொல்லக்கூட அவகசம் வழங்காமல் காவல்துறையினர் கைது செய்து, காமல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படும் சம்பவம் மிகுந்த கண்டனத்திற்குரியது.
தேர்தல் நேரத்தில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் சயலையில் இறங்கி மறியலில் ஈடுபட்டதற்காக, ஒரு பெண்ணை அதிகாலை நேரத்தில் இந்தகைய முறையில் கைது செய்வதுதான் தீர்வா என்பதைத் தமிழக அரசும், ஆளுங்கட்சியினரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஒரு பெண் என்றுகூடப் பாராமல், உடை மாற்றிக்கொள்ள அவகாசம் வழங்காமல் இரவு உடையிலேயே காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசயணை நடத்துவது, பெண்களின் கண்ணியத்தைக் கருத்தில் கொள்ளாத செயலாகும். இத்தகைய நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்.
மாற்றம், மாற்றம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், அரசியல் எதிர்ப்புகளை எதிர்கொள்ளக் கது நடவடிக்கைகளையே தீர்வாகக் கருதுவது எந்த வகையில் நியாயம்? பழிவாங்கும் நோக்கத்துடன் அரசு செயல்படுகிறதோ என்ற மண்னணம் மக்களிடையே ஏற்படும் இத்தகைய சம்பலங்கள் அமைந்துள்ளன. எனவே, தமிழக அரசு இந்தக் கைது நடவடிக்கையை உடனடியாக மறுபரிசீலனை செய்து, .எம்.கார்த்திகா அவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
என்று தேமுதிக தெரிவித்துள்ளது.