தமிழகத்தின் உள்கட்டமைப்பை உலகத் தரத்திற்கு உயர்த்தும் மெகா திட்டங்களைத் தமது திருக்கரங்களால் தொடங்கி வைத்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ள நமது மாபெரும் தலைவருக்கு, தமிழக பாஜக சார்பில் நன்றியை தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது
தமிழகத்தின் மீது அளப்பரிய அன்பும் தனி அக்கறையும் கொண்டுள்ள நமது பாசமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி , இன்று சென்னைக்கு வருகை தந்து சுமார் ₹13,000 கோடிக்கும் அதிகமான பிரம்மாண்ட வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். வெற்று வாக்குறுதிகளோடு நின்றுவிடாமல், தமிழகத்தின் உள்கட்டமைப்பை உலகத் தரத்திற்கு உயர்த்தும் மெகா திட்டங்களைத் தமது திருக்கரங்களால் தொடங்கி வைத்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ள நமது மாபெரும் தலைவருக்கு, தமிழக பாஜக மற்றும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னையின் நீண்ட நாள் கனவான இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் ₹4,900 கோடி மதிப்பிலான ‘பூந்தமல்லி – வடபழனி’ வழித்தடத் திறப்பு, தொழில் வளர்ச்சியைப் பெருக்கும் வகையில் சென்னை மணலியில் ₹1,620 கோடி மதிப்பிலான லூப் ஆயில் உற்பத்தித் திட்டம், ₹3,700 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைகள், கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் புதிய மேம்பாலங்கள், 5 அம்ரித் பாரத் ரயில் நிலையங்கள் மற்றும் தமிழக துறைமுகங்களின் நவீனமயமாக்கல் என ஒட்டுமொத்த மாநிலத்தின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குப் பிரதமர் திரு. மோடி அவர்கள் செயல்வடிவம் தந்துள்ளார்
அத்துடன், சென்னை ஐஐடியில் அதிநவீன ‘சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்தை’ நாட்டுக்கு அர்ப்பணித்ததோடு, கல்விப் பணியாற்றி வரும் ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளியின் பொன்விழா நிகழ்விலும் நேரில் பங்கேற்றுத் தமிழகக் கல்வி மற்றும் அறிவியல் துறைக்குப் புதிய பெருமை சேர்த்துள்ளார்.
அனைவருடன் இணைந்து, அனைவருக்குமான வளர்ச்சி’ என்ற தாரக மந்திரத்தோடு செயல்படும் நமது பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், வெறும் அரசியல் முழக்கங்களின்றி சொன்னதைச் செய்து முடித்துத் தமிழக மக்களின் எதிர்காலக் கனவுகளை இன்று நனவாக்கியுள்ளார். மாநிலத்தின் தொழில், வேலைவாய்ப்பு மற்றும் உள்கட்டமைப்பை உலகத் தரத்திற்கு உயர்த்தும் வரலாறு போற்றும் திட்டங்களை அள்ளித் தந்துள்ள நமது பாசமிகு பிரதமருக்கு மீண்டும் ஒருமுறை கோடானுகோடி நன்றிகளைத் தமிழக பாஜகவின் சார்பில் பணிவன்புடன் உரித்தாக்குகிறோம்.