ஆசிய விளையாட்டு: இந்திய குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

இந்த போட்டிகள் வரும் ஆண்டுகளில் இன்னும் பெரிய சாதனைகளுக்கு உத்வேகம் அளிக்கட்டும்.
Asian Games PM Modi
Published on: 

ஆசிய விளையாட்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட இந்திய குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். மேலும், உறுதி, ஆர்வம் மற்றும் விளையாட்டு உணர்வுடன் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திய விளையாட்டு வீரர்களை அவர் பாராட்டினார்.

இந்தியா 85 பதக்கங்களுடன் (21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம்) பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்தது. இது, சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற முந்தைய பதிப்பை விட 21 பதக்கங்கள் குறைவாகும்.

பிரதமர் எக்ஸ் தள பதிவு:

"2026 ஆசிய விளையாட்டு போட்டிகள் நிறைவடையும் வேளையில், நமது தேசத்தை உறுதி, ஆர்வம் மற்றும் குறிப்பிடத்தக்க விளையாட்டு உணர்வுடன் பிரதிநிதித்துவப்படுத்திய இந்திய குழுவின் ஒவ்வொருத்தருக்கும் எனது பாராட்டுகள்," என்று மோடி எக்ஸ் தள பதிவில் கூறினார்.

இந்திய பதக்க வெற்றியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்த அவர், அவர்களின் செயல்பாடுகள் "நாட்டுக்கு அளவற்ற மகிழ்ச்சியை" அளித்துள்ளதாக கூறினார்.

2026 ஆசிய விளையாட்டு போட்டிகள் நிறைவடையும் இவ்வேளையில், நமது தேசத்தை உறுதி, பேரார்வம் மற்றும் அபாரமான விளையாட்டு உணர்வுடன் பிரதிநிதித்துவப்படுத்திய இந்திய குழுவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் எனது பாராட்டுகள்.

தங்கள் செயல்பாடுகளால் தேசத்திற்கு அளவற்ற மகிழ்ச்சியை கொண்டு வந்த, பதக்கம் வென்ற அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த போட்டிகள் வரும் ஆண்டுகளில் இன்னும் பெரிய சாதனைகளுக்கு உத்வேகம் அளிக்கட்டும். அவை அடிமட்ட அளவிலும் விளையாட்டை வலுப்படுத்த பங்களிக்கட்டும்.

பிரம்மாண்டமான நிறைவு விழா:

"இந்த விளையாட்டு போட்டிகள், வரும் ஆண்டுகளில் இன்னும் பெரிய சாதனைகளுக்கு உத்வேகம் அளிக்கட்டும். மேலும், இவை அடிமட்ட அளவில் விளையாட்டை வலுப்படுத்தவும் பங்களிக்கட்டும்," என்று பிரதமர் மேலும் கூறினார்.

இரண்டு வாரங்களுக்கும் மேலாக நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில், குறைந்தது 50 உலக சாதனைகள் உட்பட 350-க்கும் மேற்பட்ட சாதனைகள் படைக்கப்பட்டன.

இப்போட்டிகளின் நிறைவை குறிக்கும் வகையில், ஆசியாவின் 45 நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் நகோயாவில் உள்ள மிசுஹோ பார்க் தடகள மைதானத்தில் ஒரு பிரம்மாண்டமான நிறைவு விழாவில் பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com