Tamilnadu Assembly Live: மேகதாது அணை கட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது- முதலமைச்சர் விஜய்

காவிரியில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பதற்கு எதிராக இன்று சட்டசபையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வருகிறார்.
முதலமைச்சர் ஜோசப் விஜய்

தனி நடுவர் மன்றம் அமைக்க ஏற்கனவே சட்டநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது- முதலமைச்சர் விஜய்

அரசின் தனித்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி- முதலமைச்சர் விஜய் பதிலுரை

மேகதாது அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை முறியடிக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் தி.மு.க. துணை நிற்கும்- உதயநிதி

காவிரி நதிநீர் தொடர்பாக புதிய நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்- உதயநிதி

திமுக அரசின் தொடர்ச்சியான முயற்சிகளால் தான் மேகதாது திட்ட அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டது- உதயநிதி

மேகதாது அணைக்கு கர்நாடகா அரசு ரூ.1000 கோடி ஒதுக்கியபோது தனித்தீர்மானம் நிறைவேற்றினோம்- உதயநிதி

2021 ஜூன் மாதமே மேகதாது அணைக்கு எதிராக பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்- உதயநிதி

ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திலேயே மேகதாது விவகாரத்தில மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தார்- உதயநிதி

காவிரியில் தமிழ்நாட்டின் உரிமை நிலைநாட்டப்பட்டதற்கு தி.மு.க.வே காரணம்- உதயநிதி

முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தை வரவேற்பதாக உதயநிதி ஸ்டாலின் பேச்சு

நீண்ட நெடிய அரசியல், சட்டப்போராட்டங்களின் மூலம் காவிரியில் உரிமை பெற்றோம்- உதயநிதி

கலைஞர் ஆட்சிக்காலத்தில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன-உதயநிதி

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சிக்கும் மேகதாது அணைக்கு எதிர்ப்பு என்பதே தி.மு.க.வின் நிலைப்பாடு- உதயநிதி

மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பது தான் தி.மு.க.வின் நிலைப்பாடு- உதயநிதி ஸ்டாலின் பேச்சு

முதலமைச்சரின் தனித்தீர்மானத்தை ஒருமனதாக ஆதரிப்பதாக எடப்பாடி பழனிசாமி பேச்சு

காவிரியில் நமக்கான உரிமையை பேணிக்காக்க வேண்டியது அனைவரது கடமை- எடப்பாடி பழனிசாமி

கர்நாடக அரசின் முயற்சி தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் உள்நோக்கம் கொண்டது- எடப்பாடி பழனிசாமி

மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழக மக்களின் வாழ்வாதாரம், உரிமை கடுமையாக பாதிக்கும்- எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சி காலத்தில் பிரதமருக்கு கடிதம் மூலமாகவும், நேரிலும் பலமுறை வலியுறுத்தப்பட்டது- எடப்பாடி பழனிசாமி

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராக அதிமுக அரசு எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்டு எடப்பாடி பழனிசாமி பேச்சு.

மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் முயற்சிகள் மேற்கொண்டோம்- எடப்பாடி பழனிசாமி

மேகதாதுவில் அணை கட்டப்படுவதை தடுக்க ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது பிரதமருக்கு கடிதம் எழுதினார்- முதலமைச்சர் முன்மொழிந்த மேகதாது தீர்மானம் மீது எடப்பாடி பழனிசாமி உரை

4 அணைகளில் 115 டிஎம்சி நீர் சேமிக்க முடியும், மேகதாதுவில் 70 டிஎம்சி நீர் சேமிக்க கர்நாடக முயற்சி-சவுமியா அன்புமணி

தமிழ்நாட்டில் ஐந்தரை கோடி மக்கள் காவிரி நீரை நம்பியே உள்ளனர்-சவுமியா அன்புமணி

காவிரியில் தமிழ்நாட்டுக்கு தான் அதிக உரிமை இருக்கிறது- சவுமியா அன்புமணி

கர்நாடகாவில் 320 கி.மீ மட்டுமே காவிரி நீர் பாய்கிறது, தமிழகத்தில் 420 கி.மீ ஓடுகிறது காவிரி நீர்- சவுமியா அன்புமணி

மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு பா.ம.க. ஆதரவு- சவுமியா அன்புமணி

40 ஆண்டுகளாக திமுக, அதிமுக எண்ணற்ற சட்ட போராட்டம் நடத்தி காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்டியுள்ளது- ராஜேந்திரன்

மேகதாதுவில் அணை கட்ட வரைவு திட்ட அறிக்கை தயாராகிறது எனவும் மேகதாது அணை கட்ட பூமி பூஜை நடத்தப்படும் என்கிறார் கர்நாடக முதல்வர் சிவக்குமார்- ராஜேந்திரன்

முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக மதிமுக எம்எல்ஏ ராஜேந்திரன் பேச்சு

விவசாயிகள் நலனுக்காக முதல் கூட்டத்தொடரிலேயே தீர்மானத்தை முன்மொழிந்ததற்கு வரவேற்பு- சிபிஎம் எம்எல்ஏ செல்லசுவாமி

முதலமைச்சரின் தனித்தீர்மானத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு

தமிழ்நாடு நீர் மிகை மாநிலமாக மாற வேண்டும், அதற்காக ஆறுகளை இணைக்க வேண்டும்- பிரேமலதா வலியுறுத்தல்

மின்மிகை நீர் மேலாண்மையை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என முதலமைச்சரிடம் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை

தன்னிறைவு மிக்க மாநிலமாக நம் தமிழகத்தை உருவாக்க மாநில நதிகளை முதலில் இணைப்போம்- பிரேமலதா

மழை காலம் தொடங்குவதற்கு முன்னரே நீர்நிலைகளை தூர்வாரி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திடுக- பிரேமலதா

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கர்நாடக முதல்வர் சிவக்குமாருடன் மேகதாது விவகாரம் குறித்து பேச வேண்டும். பேச்சுவார்த்தை நடத்த தயார் என கர்நாடக முதலமைச்சர் கூறியுள்ளார். அதனால் அவருடன் தமிழக முதலமைச்சர் பேச வேண்டும்.

காவிரிக்காக ஜெயலலிதா, கலைஞர், மு.க.ஸ்டாலின் என அனைவரும் போராடியுள்ளனர்-பிரேமலதா விஜயகாந்த்

தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு எப்போது மாறப்போகிறது?- பிரேமலதா விஜயகாந்த்

சுதந்திரம் கிடைத்த காலத்தில் இருந்து காவிரிப் பிரச்சனை பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது- பிரேமலதா

சுதந்திரம் வாங்கிய நாள் முதல் இன்று வரை காவிரி நீர், முல்லை பெரியாறு, மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வே இல்லை- பிரேமலதா

முதலமைச்சரின் தனித்தீர்மானத்துக்கு தே.மு.தி.க. ஆதரவு

உச்சநீதிமன்ற தீர்ப்பை திசை திருப்பி தவறான முறையில் சாதகமாக பயன்படுத்த கர்நாடக முதல்வர் முயற்சிக்கிறார்- ஜவாஹிருல்லா

கர்நாடக முதல்வர் சுயலாபத்திற்காக உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதித்து அணை கட்ட முயற்சி- ஜவாஹிருல்லா

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகம் தவறான திசையில் செல்கிறது- ஜவாஹிருல்லா

முதலமைச்சரின் தனித் தீர்மானத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி முழு ஆதரவு அளிப்பதாக மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா பேச்சு

முதலமைச்சரின் தனித்தீர்மானத்துக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு

கூட்டணி தர்மத்தை விட தமிழ்நாட்டின் தர்மம் முக்கியம் என த.வெ.க. அரசு செயல்பட வேண்டும். கர்நாடக அரசை தடுப்பதற்கு சட்ட நடவடிக்கையே சிறந்தது- கொமதேக எம்எல்ஏ நித்யானந்தம்

முதலமைச்சர் முன்மொழிந்த மேகதாது தீர்மானத்துக்கு கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி ஆதரவு

5 கோடி மக்களின் குடிநீர் தாம் தீர்க்கிறது ஜீவ நதியான காவிரி நதி. அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி பிரதமர், நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து அழுத்தம் தர வேண்டும்- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

கர்நாடக காங்கிரஸ் அரசுடன் தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடாந்து கொண்டு இணக்கமான சூழல் ஏற்படுத்த வேண்டும்- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

மேகதாது அணை கட்டப்பட்டால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் பாலைவனமாக மாறும்- ராமச்சந்திரன்

முதலமைச்சர் முன்மொழிந்த மேகதாது தீர்மானத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு- ராமச்சந்திரன்

தமிழர் உரிமை காக்கும் அரசின் அனைத்து முடிவுகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதுணையாக இருக்கும்- அமைச்சர் வன்னி அரசு

இந்தியாவின் கடைமடைப்பகுதியான தமிழகம் நீரியல் தேவைக்காக மற்ற மாநிலங்களிடம் போராட வேண்டிய சூழல். தமிழக வேளான் நலனுக்காக மட்டுமல்ல கர்நாடக விவசாயிகள் மீது அக்கறையுடன் முதலமைச்சர் கொண்டுவந்துள்ள தீர்மானத்திற்கு ஆதரவு- அமைச்சர் வன்னி அரசு

கர்நாடக அரசு மேகதாது விவகாரத்தில் மத்திய அரசின் ஒப்புதலின்றி செயல்படக்கூடாது- அமைச்சர் வன்னி அரசு

முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தனது முழு ஆதரவை தெரிவிக்கிறது. வரவலாற்று சிறப்புமிக்க முதலமைச்சரின் முன்மொழிவை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்- அமைச்சர் வன்னி அரசு

மேகதாது குறித்த முதலமைச்சரின் தனித் தீர்மானத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு- அமைச்சர் வன்னி அரசு

மேகதாது அணை என்பது நமக்கு மட்டுமல்ல கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்களை சார்ந்த பிரச்சனை- தமிமுன் அன்சாரி

தமிழக நலன் சார்ந்த விவகாரத்தில் வேறுபாடுகளை கடந்து அனைவரும் ஓரணியில் நிற்க வேண்டும்- தமிமுன் அன்சாரி

மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு சுமூக நிலையை உருவாக்க வேண்டும்- தமிமுன் அன்சாரி

முதலமைச்சரின் தனித்தீர்மானத்துக்கு மனிதநேய ஜனநாயகக் கட்சி ஆதரவு.

தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீரை மூன்று வழிகளில் கர்நாடகா வழங்க வேண்டும்- அமைச்சர் ராஜேஷ்குமார்

தமிழக விவசாயிகள் நலனுக்காக முதலமைச்சர் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் தமிழக காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும்- அமைச்சர் ராஜேஷ்குமார்

மேகதாது குறித்த முதலமைச்சரின் தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற கட்சித் தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர்.

மேகதாது அணை கட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது- முதலமைச்சர் விஜய்

காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காது படுகை மாநில இசைவை, மாநில அரசை பெறாமல் தன்னிச்சையாக முயற்சி

மேகதாது அணை திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட எவ்வித அனுமதியும் வழங்கக்கூடாது- முதலமைச்சர் விஜய்

கர்நாடக அரசின் முயற்சியை முறியடித்து தமிழ்நாட்டு உழவர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்.

காவிரிப்படுகை மாநிலங்களின் இசைவின்றி கர்நாடகம் எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாது- முதலமைச்சர் விஜய்

கர்நாடக அரசின் தன்னிச்சையான முயற்சிக்கு சட்டமன்ற பேரவை கடும் கண்டனம்- முதலமைச்சர் விஜய்

கட்சி வேறுபாட்டை ஒதுக்கி யாரும் யாரையும் குறை கூறாமல் நாம் அனைவரும் ஓரணியில் நிற்கவேண்டும்- முதலமைச்சர் கோரிக்கை

அரசியலே மக்களுக்கானது என்பது அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும்- முதலமைச்சர் விஜய்

கொள்கை, நிலைப்பாட்டில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் மக்களுக்கு பிரச்சனை எனில் அனைத்து கட்சியும் மக்கள் பக்கம் நிற்கும்- முதலமைச்சர் விஜய்

மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்து அதனை முன்மொழிந்தார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

சட்டமன்ற பேரவை முன்னாள் செயலாளர் சி.கு.ராமசாமி, திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சௌத்ரி, கே.ராஜன், இயக்குநர் பாரதிராஜா ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதன்பின் உறுப்பினர்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணு மறைவிற்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம்.

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்ட பின் உறுப்பினர்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

தமிழ சட்டசபையின் 2-ம் நாள் கூட்டத்தொடர் தொடங்கியதும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

தமிழக சட்டசபையின் 2-ம் நாள் கூட்டத்தொடர் தொடங்கியது.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தமிழக சட்டசபையில் இன்றுமுதல் விவாதம் நடைபெறுகிறது. குறுகிய கால கூட்டத்தொடர் என்பதால் 3 நாட்களுக்கும் கேள்வி-பதில் நேரம் இருக்காது என அறிவிப்பு

சட்டசபை கூட்டத்தொடர் - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வருகை.

சட்டசபை கூட்டத்தொடர் - எடப்பாடி பழனிசாமி, செளமியா அன்புமணி உள்ளிட்டோர் வருகை

X

Maalai Malar
www.maalaimalar.com