மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து

ராகுல் காந்திக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். மக்களவையில் அவரது குரல் தொடர்ந்து வலிமையாக ஒலிக்கட்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து
Published on

சென்னை:

மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில், புதிய பதவிக்கு தேர்வாகியுள்ள எனது சகோதரர் ராகுல் காந்தியை இந்தியா வரவேற்கிறது. மக்களவையில் அவரது குரல் தொடர்ந்து வலிமையாக ஒலிக்கட்டும் என்று வாழ்த்தினார்.

இந்தநிலையில், நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய், ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்துகள் ராகுல் காந்தி. நமது நாட்டு மக்களுக்கு சேவை செய்ய எனது மனமார்ந்த வாழ்த்துகள் என கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com