திமுக துணை பொதுச் செயலாளராக கனிமொழி தேர்வு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சியின் மற்ற நியமன பதவிகளை அறிவித்தார்.சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து திமுக துணை பொதுச் செயலாளர் பதவிக்கு கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக துணை பொதுச் செயலாளராக கனிமொழி தேர்வு
Published on

தி.மு.க. பொதுக்குழுவில் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சியின் மற்ற நியமன பதவிகளை அறிவித்தார்.

திமுக துணை பொதுச் செயலாளராக கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளதாக பொதுக்குழுவில் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதில் மகளிரணி செயலாளராக உள்ள கனிமொழி எம்.பி.க்கு கூடுதல் பதவியாக துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து திமுக துணை பொதுச் செயலாளர் பதவிக்கு கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார்.

துணைப் பொதுச் செயலாளராக ஏற்கனவே இருந்த ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் 2-வது முறையாக துணை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

திமுக முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், திமுக தணிக்கைக்குழு உறுப்பினர்களாக முகமது சகி, பிச்சாண்டி, வேலுச்சாமி, சரவணன் ஆகிய 4 பேர் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com