விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்

விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினரான புகழேந்தி உடல்நலக் குறைவால் காலமானார்அண்ணன் புகழேந்தி அவர்களுடைய மரணம் கழகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் - உதயநிதி
விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்
Published on

விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினரரான புகழேந்தி மறைவிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில்,

"விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளரும் - விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் புகழேந்தி அவர்கள் உடல்நலக் குறைவால் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம்.

கழகப்பணி, மக்கள் பணி இரண்டிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, அர்ப்பணிப்போடு பணியாற்றிய ஆற்றல் மிகு செயல்வீரர். அண்ணன் புகழேந்தி அவர்களுடைய மரணம் கழகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

இத்துயரமான நேரத்தில் அண்ணன் புகழேந்தி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், கழகத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் அவர்களின் பணிகள் என்றும் நிலைத்திருக்கும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com