சட்ட விதிகளில் அதிரடி திருப்பம்: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும்

கழக பொதுச்செயலாளர் பொறுப்பிற்குப் போட்டியிட கழகத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகள் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.தலைமைக் கழகப் பொறுப்புகளில் குறைந்தது தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.
சட்ட விதிகளில் அதிரடி திருப்பம்: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும்
Published on

சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் விஷயத்தில் கட்சியின் சட்ட விதிகளில் அதிரடியாக திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

கழக சட்ட திட்ட விதி எண் 20அ பிரிவு-1 கீழ்க்கண்டவாறு மாற்றி அமைக்கப்படுகிறது.

* கழக உறுப்பினர்கள், கழகப் பொதுச்செயலாளர் பொறுப்பிற்குப் போட்டியிட தகுதி உடையவர் ஆவார்கள்.

* கழக பொதுச்செயலாளர் பொறுப்பிற்குப் போட்டியிட கழகத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகள் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.

* தலைமைக் கழகப் பொறுப்புகளில் குறைந்தது தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.

* குறைந்தது 10 மாவட்டக் கழகச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். 10 மாவட்டக் கழகச் செயலாளர்கள் வழிமொழிய வேண்டும். மாவட்டக் கழகச் செயலாளர், ஒரு வேட்பாளருக்கு மட்டும் தான் முன்மொழியவோ அல்லது வழிமொழியவோ வேண்டும்.

* கழகத்தின் சட்ட திட்ட விதிமுறைகளில், விதி-20அ பிரிவு-2 "கழகப் பொதுச்செயலாளர், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்'' என்று மாற்றி அமைக்கப்படுகிறது.

* கழகத்தின் சட்ட திட்ட விதிமுறைகளில், விதி-20ஆ பின்வருமாறு மாற்றி அமைக்கப்படுகிறது.

* கழக துணை பொதுச்செயலாளர்களை, கழக செயலாளர் நியமனம் செய்வார்.

"கழக சட்ட திட்ட விதிகளின் அடிப்படை உணர்வாக உருவாக்கப்பட்டுள்ள "கழகப் பொதுச் செயலாளர்" கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மட்டும் நீக்குவதற்கோ, மாற்றுவதற்கோ, திருத்துவதற்கோ உரியதல்ல.

* கழகத்தின் சட்ட திட்ட விதிமுறைகளில், விதி எண். 45-ல், பின்வருவன சேர்க்கப்படுகிறது: "கழக சட்ட திட்ட விதிகளின் அடிப்படை உணர்வாக உருவாக்கப்பட்டுள்ள "கழகப் பொதுச்செயலாளர்" கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மட்டும் நீக்குவதற்கோ, மாற்றுவதற்கோ, தளர்த்துவதற்கோ அதிகாரம் இல்லை.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com