பொள்ளாச்சி ஜெயராமன்-விஜயபாஸ்கர் உள்பட 44 பேரை நீக்குகிறேன்- ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 44 பேரை நீக்குகினே் என்று ஓ.பன்னீர்செல்வம் இன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது.
பொள்ளாச்சி ஜெயராமன்-விஜயபாஸ்கர் உள்பட 44 பேரை நீக்குகிறேன்- ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
Published on

சென்னை:

அ.தி.மு.க.வில் இருந்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 44 பேரை நீக்குகினே் என்று ஓ.பன்னீர்செல்வம் இன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க.வின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் கீழ்க்கண்ட நபர்களை நீக்குகிறேன்.

பொள்ளாச்சி ஜெயராமன், சி விஜயபாஸ்கர், கீர்த்திகா முனியசாமி, ஆர்.எஸ்.ராஜேஷ், டி.ஜி. வெங்கடேஷ் பாபு, பாலகங்கா, வி. சோமசுந்தரம், திருக்கழுகுன்றம் எஸ். ஆறுமுகம் சிட்லபாக்கம் ச. ராசேந்திரன், பா. பென்ஜமின், வி.அலெக்சாண்டர், மாதவரம் வி.மூர்த்தி, பி.வி.ரமணா , எஸ்.ஆர்.கே.அப்பு, வேலழகன் கே.சி.வீரமணி, ரவி, தூசி கே.மோகன், அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி,

கே.ஏ.பாண்டியன், அருண்மொழிதேவன், இரா. குமரகுரு, கே. அசோக்குமார், கே.பி.அன்பழகன், ஜி. வெங்கடாஜலம், கே.பி. ராமலிங்கம்,கே.சி. கருப்பணன், சி.மகேந்திரன், அம்மன் கே.அர்ச்சுணன், கோவை மாநகர் மாவட்டக் கழகச் பி.ஆர்.ஜி.அருண்குமார், கப்பச்சி டி.வினோத், எம். பரஞ்ஜோதி, ப.குமார், எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ். பவுன்ராஜ், ஆர்.காமராஜ், பி.கே.வைரமுத்து, பி.ஆர். செந்தில்நாதன், எம்.ஏ.முனியசாமி, தச்சை என்.கணேசராஜா எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன்.

எஸ்.பி. சண்முகநாதன் டி.ஜாண்தங்கம், புதுச்ஏசேரி மாநில செயலாளர் .அன்பழகன் ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com