

விஜய் பெயரில் போலி எழுத்தாளர்கள், இல்லாத பதிப்பகம் பெயரில் 523 புத்தகங்கள் கொள்முதல் - AI மூலம் உருவாக்கப்பட்ட புத்தகங்கள் என ராஜ்மோகன் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் போலி புத்தக கொள்முதல் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். திருச்சி காமராஜர் நூலகத்திற்கான கொள்முதல் நடவடிக்கைகள் முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளதாகவும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நூலகங்களுக்கான கொள்முதல் நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது அறிவுத்தளத்திற்கு விடப்பட்ட சவால் என்றும், இது அரசியலுக்கு அப்பாற்பட்ட நடவடிக்கை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். பெரியாரின் பெயரை சொல்லியே பெரியாருக்கே விபூதி அடிக்கும் வகையில் இந்த மோசடியில் திமுக ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் குற்றம்சாட்டினார். குறிப்பாக கோவை பெரியார் அறிவுலகத்தில் மட்டும் சுமார் 3000 புத்தகங்கள் போலியாக இருக்கலாம் என்றும், அகல்விளக்கு, பீனிக்ஸ் போன்ற பெயர்களில் ஒரே முகவரியில் 20 பதிப்பகங்கள் இயங்குவதாக போலி நூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அனைத்து நூலகங்களிலும் ஆய்வு செய்து ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலி நூல்களை கண்டுபிடிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் முதற்கட்டமாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடைபெற்று வருவதாகவும், அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகவும், அவர் விரைவில் நீதியின் முன் நிறுத்தப்படுவார் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் உறுதிபட தெரிவித்தார்.