மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்த தமிழ் மாநில காங்கிரஸ்

த.வெ.க வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், மக்களுக்கு நேர்மையான ஆட்சியை, வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்தை கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
ஜிகே வாசன்
ஜிகே வாசன்
Published on
Summary

நடைபெற இருக்கின்ற மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்தின் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக்கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பதாக ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஊழலுக்கு முற்றுப்புள்ளி

தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து துறைகளிலும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கிற அரசாக புதிய த.வெ.க அரசு விளங்குகிறது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி தந்திருக்கிறார்கள்.

பெருந்தலைவர் காமராஜர் அவர்களை கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொண்டு செயல்படுகின்ற த.வெ.க வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய் அவர்கள் மக்களுக்கு நேர்மையான ஆட்சியை, வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்தை கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

ஆதரவு

குறிப்பாக குறைந்த நாட்களிலேயே தமிழக மக்களுக்கு அதிக நம்பிக்கையை கொடுத்திருக்கிறார் நம் முதலமைச்சர் விஜய் அவர்கள். இதன் மூலம் பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனார் ஆகியோரின் எண்ணங்களுக்கு ஏற்றவாறு வளமான தமிழகத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

எனவே புதிய த.வெ.க அரசின் நல்ல தூய முயற்சிக்கு நடைபெற இருக்கின்ற மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் த.வெ.ககூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) ஆதரவளிக்கிறது என்பதை த.மா.கா(மூ) சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

X

Maalai Malar
www.maalaimalar.com