பள்ளிகளில் தூய்மைப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது - தமிழக அரசு எச்சரிக்கை

மாணவர்களின் நலன் மற்றும் கண்ணியத்தை பாதுகாக்கும் வகையில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் தூய்மைப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது - தமிழக அரசு எச்சரிக்கை
Published on: 
Summary

பள்ளிகளில் தூய்மைப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது. மீறினால் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அரசு அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தூய்மைப்பணி

பள்ளி வளாகம், வகுப்பறைகள் மற்றும் கழிவறைகளை தூய்மைப்படுத்தும் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது. இதனை மீறி மாணவர்களை தூய்மைப் பணிகளில் ஈடுபடுத்தும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர்களை பள்ளி வளாகம் மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுத்துவது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தொடரப்பட்ட வழக்கில், 2021-ம் ஆண்டு டிசம்பர் 20-ந்தேதி வழங்கப்பட்ட உத்தரவு மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொட ரப்பட்ட வழக்குகளின் தீர்ப்புகளை மேற்கோள்காட்டி பள்ளிக் கல்வித்துறை இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

கட்டாயம் பின்பற்ற வேண்டும்

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை பள்ளி வளாகம், வகுப்பறைகள் மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுத்துவது கூடாது என்று இதன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், மாணவர்களின் நலன் மற்றும் கண்ணியத்தை பாதுகாக்கும் வகையில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கண்காணிக்க வேண்டும்

மேலும், இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுவதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும், விதிமீறல்கள் குறித்து புகார்கள் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

X