போலீஸ் வாகனத்தில் மது அருந்திய எஸ்.எஸ்.ஐ. லிங்கேஸ்வரன் சஸ்பெண்ட்

லிங்கேஸ்வரன் பரங்கிமலை ஆயுதப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். காவல் வாகனத்தில் சீருடை அணியாமல் லிங்கேஸ்வரன் மது அருந்தும் வீடியோ இணையத்தில் வெளியானது.
போலீஸ் வாகனத்தில் மது அருந்திய எஸ்.எஸ்.ஐ. லிங்கேஸ்வரன் சஸ்பெண்ட்
Published on

சென்னையில் கைதிகளை அழைத்துச் செல்லும் போது போலீஸ் வாகனத்தில் அமர்ந்து மது அருந்திய சிறப்பு உதவி ஆய்வாளர் லிங்கேஸ்வரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

லிங்கேஸ்வரன் பரங்கிமலை ஆயுதப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். கைதியை சிறையில் விட்டு விட்டு திரும்பியபோது, காவல் வாகனத்தில் சீருடை அணியாமல் லிங்கேஸ்வரன் மது அருந்தும் வீடியோ இணையத்தில் வெளியானது.

உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் லிங்கேஸ்வரன் மது அருந்தியது உறுதியான நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com