கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை: முதலமைச்சர் விஜய் வங்கிக் கணக்கில் விடுவித்துத் தொடக்கம்!

பட்டுவளர்ச்சித் துறை சார்பில் தருமபுரி மாவட்டம், சோகத்தூரில் 19 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி வளாகத்தையும் திறந்து வைத்தார்.
முதலமைச்சர் விஜய்
Published on: 

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில், காவல் துறை சார்பில் 8 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவிலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் 8 கோடியே 41 இலட்சம் ரூபாய் செலவிலும் என மொத்தம் 17 கோடியே 31 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும்,

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் சென்னை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 1,003 கோடியே 97 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 643 அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கரூர் மாவட்டம், கொளந்தாகவுண்டனூர் திட்டப் பகுதியில் 17 கோடியே 56 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 125 அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஆகியவற்றையும்,

அரசு பட்டுக்கூடு அங்காடி வளாகம்

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில், ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதி – II ல் 15 கோடியே 23 இலட்சம் ரூபாய் செலவில் 17.95 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள வேளாண்மை உற்பத்தி சார்ந்த புதிய தொழிற்பேட்டை மற்றும் விழுப்புரம் மாவட்டம், நாயனூரில் 5 கோடியே 67 இலட்சம் ரூபாய் செலவில் 29.44 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள புதிய தொழிற்பேட்டை, தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநரகம் சார்பில் திருப்பூர் மாவட்டம், முதலிபாளையத்தில் 13 கோடியே 95 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கயிறு குழுமத்திற்கான பொது வசதி மையம் ஆகியவற்றையும்,

பட்டுவளர்ச்சித் துறை சார்பில் தருமபுரி மாவட்டம், சோகத்தூரில் 19 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி வளாகத்தையும் திறந்து வைத்தார்.

கரும்பு விவசாயிகளின் நலன் காத்திடும் வகையில், சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்தபடி, கரும்பு சிறப்பு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.709.50-யை விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு விடுவிப்பதைத் தொடங்கி வைக்கும் விதமாக, 3 கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகைக்கான ஆணைகளை வழங்கினார். இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 85,000 கரும்பு விவசாயிகள் பயன்பெறுவர். இதற்காக, நடப்பு ஆண்டில் 603 கோடியே 33 இலட்சம் ரூபாய் அரசுக்குக் கூடுதல் செலவினம் ஏற்படும்.

X