ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் ரூ.5 கோடி பரிசு - தமிழக அரசு!

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ட்ரீம் ஒலிம்பிக்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும்
Olympics
Published on: 

ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை ரூ.3 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.

டிரீம் ஒலிம்பிக்ஸ்

'டிரீம் ஒலிம்பிக்ஸ் 2036' (Dream Olympics 2036) என்பது தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் உலகளாவிய ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கங்களை வெல்வதை இலக்காகக் கொண்டு தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட ஒரு சிறப்பான புதிய திட்டமாகும்.

இத்திட்டத்தை சென்னையில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கான பாராட்டு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். மேலும் இந்த புதிய திட்டத்தின் கீழ் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

பரிசு விவரங்கள்

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ட்ரீம்ஒலிம்பிக்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும்.ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றால் ரூ.3 கோடியும், வெண்கலம் வென்றால் ரூ.2 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆண்டுக்கு ரூ.50 லட்சம் உதவித்தொகை

ஆசிய விளையாட்டுப் போட்டிகள, பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், பாரா காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற அனைவரும் 'ட்ரீம் ஒலிம்பிக்ஸ்' திட்டத்தில் சேர்க்கப்பட்டு, மாதம் ரூ.1 லட்சம் உதவித்தொகை உட்பட ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

பயிற்சியாளர்களுக்கு ஊக்கத்தொகை

விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி இனி பயிற்சியாளர்களுக்கும் 50% ஊக்கத்தொகை வழங்கப்படும்அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

20வது ஆசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் 46 செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீராங்கனைகளுக்கு பாராட்டு விழாவில் அமைச்சர் இதனை தெரிவித்தார்

ஒலிம்பிக் நகரத்தை உருவாக்குவதே நோக்கம்

ஒலிம்பிக் நகரத்தை உருவாக்குவதே முதல்வரின் கனவுபோதைப்பொருளை ஒழிக்க என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று தெரிவித்தவர் நம் முதல்வர்.விளையாட்டுத் துறைக்கு தேவையானதை செய்து கொடுப்பவர்தான் நமது முதல்வர் விஜய்ஒலிம்பிக் போட்டிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தகுதி பெற உள்கட்டமைப்புகள் இல்லை விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com