துன்புறுத்தல்.. ஒன்று கூடிய வீரர்கள்.. பாராலிம்பிக் ஈட்டி எறிதல் பயிற்சியாளர் நாவல் சிங் அதிரடி நீக்கம்

இரண்டு முறை பாராலிம்பிக் தங்கம் வென்ற சுமித் ஆன்டில் புகாருக்கு ஒலிம்பிக் தங்கம் வென்ற வீரர் நீரஜ் சோப்ராவும் ஆதரவு தெரிவித்தார்.
துன்புறுத்தல்.. ஒன்று கூடிய வீரர்கள்.. பாராலிம்பிக் ஈட்டி எறிதல் பயிற்சியாளர் நாவல் சிங் அதிரடி நீக்கம்
Published on

2015ஆம் ஆண்டு துரோணாச்சார்யா விருது வென்றவர் நாவல் சிங். தேசிய அளவிலான பல ஈட்டி எறிதல் வீரர்களுக்குப் பயிற்சியளித்தவர் இவர்.

இந்நிலையில் பாராலிம்பிக் ஈட்டி எறிதல் சாம்பியன் சுமித் ஆன்டில் அளித்த புகாரின் அடிப்படையில் நாவல் சிங் பயிற்சியாளர் பதவியில் இருந்து இந்திய பாராலிம்பிக் கமிட்டியால் நீக்கப்பட்டுள்ளார்.

இரண்டு முறை பாராலிம்பிக் தங்கம் வென்ற சுமித் ஆன்டில், பயிற்சியாளர் நாவல் சிங் தன்னை மனரீதியாகத் துன்புறுத்துவதாகவும், தன்னையும் தனது குடும்பத்தினரையும் தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் சுமித் ஆன்டில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் புகார் அளித்தார்.

சுமித்தின் இந்தப் புகாருக்கு ஒலிம்பிக் தங்கம் வென்ற வீரர் நீரஜ் சோப்ராவும் ஆதரவு தெரிவித்தார்.

நாட்டின் முன்னணி தடகள வீரர்கள் பலரும் இணைந்து ஏப்ரல் 10ஆம் தேதி இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் இது குறித்து எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்தனர்.

ஆணைய அதிகாரிகள் இரு தரப்புக்கும் இடையே சமரசம் செய்ய முயன்றனர். ஆனால், சுமித் ஆன்டில் அதனை ஏற்க மறுத்துவிட்டார்.

பயிற்சியாளரிடமிருந்து அடிக்கடி அவமதிப்புகளையும் வசவுகளையும் சந்தித்ததால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் சுமித் உறுதியாக இருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகளின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு கூடிய இந்திய பாராலிம்பிக் கமிட்டி, நாவல் சிங்கை உடனடியாகப் பணியிலிருந்து நீக்க முடிவு செய்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com