ஜெம் வீரமணிக்கும் திமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை - ரகுபதி திட்டவட்டம்

வீரமணியிடம் பணம் வாங்கிக்கொண்டு கைது செய்யாமல் இருக்க வேண்டிய அவசியம் திமுகவிற்கு கிடையாது.
Ragupathy
Published on
Summary

ஜெம் வீரமணி மீது 2025, அக்டோபர் 6-ந்தேதி தான் புகார் தரப்பட்டுள்ளது, 7-ந்தேதியே எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது என்று திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி கூறினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* ஜெம் வீரமணி வழக்கு திமுக ஆட்சியில் கைவிடவில்லை. மேல் விசாரணையை தள்ளிவைத்தோம்.

* புதிய ஆதாரம் கிடைக்கும் வரை மேல் விசாரணையை தள்ளி வைப்பதாக தான் போக்சோ நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி

* போக்சோ வழக்கில் எந்த தகவலையும் கசிய விடக்கூடாது என்பதால் தான் அறிக்கை விடவில்லை.

* வீரமணி விவகாரத்தில் ஆதாரம் கிடைத்தவுடன் வழக்கு தொடரப்படும் என்று தான் திமுக ஆட்சியில் கூறினோம்.

* வீரமணி மீது 2025, அக்டோபர் 6-ந்தேதி தான் புகார் தரப்பட்டுள்ளது, 7-ந்தேதியே எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

* ஜெம் கிரானைட்ஸ் வீரமணி தொடர்பான வீடியோ தெளிவாக இல்லாததால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது.

* ஜெம் வீரமணி வழக்கில் இல்லாத ஒரு குற்றத்தை திமுக மீது சுமத்துகிறார்கள்.

* தகவல் கசிந்தால் பாதிக்கப்பட்டவருக்கு தான் பிரச்சனை, மேலும் குற்றவாளி தப்பிக்கவும் வாய்ப்பாக அமையும்.

* குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக செயல்பட்டோருக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம்.

* வீரமணியிடம் பணம் வாங்கிக்கொண்டு கைது செய்யாமல் இருக்க வேண்டிய அவசியம் திமுகவிற்கு கிடையாது.

* ஜெம் வீரமணி வழக்கில் ஜெயலலிதா ஆட்சியிலும் புகார் அளிக்கப்பட்டது.

ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ

* ஜெம் வீரமணிக்கும் திமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை.

* நீதிமன்றத்தையே ஏமாற்றிய அரசு தவெக அரசு.

* ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ மீதான வழக்கில் அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யவில்லை.

* ஒரு செய்தி வந்தால் அதற்கு ஒரு போலி செய்தி உருவாக்கி பரப்புவதே தவெகவினரின் வேலையாக உள்ளது.

* வீரமணி மீது தவெக ஆட்சியில் 25 நாட்கள் அமைதியாக இருந்து செப்.21-க்கு மேலாக நடவடிக்கை எடுப்பது ஏன்?

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com