மாமன்னர் பூலித்தேவன் பிறந்தநாள்: வருகிற 1-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் மரியாதை

மாமன்னர் பூலித்தேவன் பிறந்தநாளையொட்டி வருகிற 1-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் மரியாதை செலுத்துவார்கள்.
Edappadi Palaniswami
Published on

மாமன்னர் பூலித்தேவன் பிறந்தநாளையொட்டி வருகிற 1-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் மரியாதை செலுத்துவார்கள்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாமன்னர் பூலித்தேவன் 311-வது பிறந்தநாளான வருகிற 1-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு, `தென்காசி வடக்கு மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதி, நெற்கட்டும் செவல்’ என்ற இடத்தில் அமைந்துள்ள மாமன்னர் பூலித்தேவன் உருவச்சிலைக்கு முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, ராஜன் செல்லப்பா, பாஸ்கரன், ராஜலெட்சுமி, சி.த. செல்லப்பாண்டியன், சண்முகநாதன், இன்பதுரை எம்.பி., ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com