

தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இதுவரை பெரிய அளவில் மழைப்பொழிவை கொடுக்கவில்லை. அடுத்தடுத்து உருவான 3 புயல்களும் ஆந்திரா, ஒடிசா மாநிலங்களை நோக்கி சென்று விட்டன.
இதன் காரணமாகவே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்ய வில்லை. இதனால் தென் மேற்கு பருவமழையை போன்று வடகிழக்கு பருவ மழையும் ஏமாற்றத்தை அளித்து விடுமோ? என்கிற எண்ணம் அனைவரின் மத்தியிலுமே இருந்து வருகிறது.
இந்த நிலையில் நாளை முதல் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மைய இயக்குனர் துரை தெரிவித்துள்ளார்.
கிழக்கு திசை காற்று காரணமாக இந்த மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறி உள்ளார். இதற்கிடையே அடுத்த மாதம் முதல் வாரத்தில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இந்த தாழ்வு பகுதி நல்ல மழையை கொடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.