பெரியார் அறிவுலகம் திராவிட மாடல் அரசின் கனவு திட்டம்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

பெரியார் அறிவுலகத்தை இளைஞர்கள், மாணவர்கள் பார்த்து பயன்பெற வேண்டும்.
DMK Leader MK Stalin
Published on: 
Summary

கோவையில் பெரியார் அறிவுலகம் சென்று திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

கடந்த திமுக ஆட்சியில் காந்திபுரத்தில் ரூ.300 கோடியில் பெரியார் அறிவுலகம் அமைக்க மு.க.ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தநிலையில் கடந்த அக். 16-ம் தேதி கோவை சென்ற முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.

இந்நிலையில், திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று பெரியார் அறிவுலகத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

பின்னர், செய்தியாளர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கோவை பெரியார் அறிவுலகம் திராவிட மாடல் அரசின் கனவு திட்டம். பெரியார் உணர்வுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளும் விதமாக பெரியார் அறிவுலகம் திகழ்கிறது.

பெரியார் அறிவுலகத்தை இளைஞர்கள், மாணவர்கள் பார்த்து பயன்பெற வேண்டும். மாணவர்கள் இங்கு வந்து அறிவுத்தினை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

திராவிடம் இயக்கம் என்றால் என்ன, பெரியாரின் உணர்வுகள், லட்சியத்தை அறிய பெரியார் அறிவுலகம் வரவேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X