“என்மீது ஒரே ஒரு குற்றச்சாட்டுதான் வைக்க முடியும்... ஆனால் அதற்கான காரணம் மக்களுக்கு தெரியும்” - மரகதம் குமரவேல் பேச்சு!

கொள்கை முரண்பாடு காரணமாகத்தான் நான் அ.தி.மு.க.வில் இருந்து வெளியே வந்தேன்.
“என்மீது ஒரே ஒரு குற்றச்சாட்டுதான் வைக்க முடியும்... ஆனால் அதற்கான காரணம் மக்களுக்கு தெரியும்” - மரகதம் குமரவேல் பேச்சு!
Published on: 

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளநிலையில், இத்தொகுதிகளில் அரசியல் கட்சிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் இன்று மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம், ஆத்துரில் நடைபெற்ற இந்த பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய வேட்பாளர் மரகதம் குமரவேல்.,

ஒரே ஒரு குற்றச்சாட்டுதான்

என்மீது பல குற்றச்சாட்டுகள் வைத்துள்ளனர். திமுகவும், அதிமுகவும் நான் ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்ததாக குற்றச்சாட்டை வைக்கின்றனர்.

நான் ஏன் பதவியை ராஜினாமா செய்தேன் என அனைவருக்கும் தெரியும். திமுகவும், அதிமுகவும் சேர்ந்து கொள்கைக்கு மாறாக ஆட்சியமைக்கத் திட்டம் தீட்டினர். அது பிடிக்காமல்தான் நான் கட்சியை விட்டு வெளியே வந்தேன்.

ஏனென்றால் என் அப்பா எம்.ஜி.ஆரின் தோட்டத்தில்தான் வேலை பார்த்தார். ஆனால், புரட்சித் தலைவரின் குடும்பத்தில் ஒருவராகத்தான் இருந்தார்.

எனக்குப் பெயர் சூட்டியவர் எம்.ஜி.ஆர். என்னை வளர்த்தவர் அவர்தான். அவரது உப்பை நான் சாப்பிட்டுள்ளேன். எம்.ஜி.ஆரின் ரத்தம் என் உடலில் ஓடுகிறது.

கொள்கை முரண்பாடு

கொள்கை முரண்பாடு காரணமாகத்தான் நான் வெளியே வந்தேன். என்னை என்னால் பார்த்துக்கொள்ள முடியும். மதுராந்தகம் மக்களின் வளர்ச்சிக்காகப் பாடுபட வேண்டும் என்பதால்தான் த.வெ.கவில் இணைந்தேன். முதலமைச்சர் விஜய் இந்தத் தொகுதியை விட்டுவிட மாட்டார்.

தவெகவின் கொள்கையை ஊழலற்ற ஆட்சிதான். எம்.ஜி.ஆரை தனது எடுத்துக்காட்டாக கொண்டு வாழும் முதலமைச்சர் எனக்கு எதற்கு பணம் கொடுக்கவேண்டும்? கூட்டணி இல்லாமல் தனித்து நின்று வெற்றிப் பெற்றவர்.

ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் வெற்றிப் பெற்றவர் தளபதி விஜய். சொல்பவர்களுக்கு தெரியும் யார் குதிரைபேரம் செய்கிறார்கள் என்று? . தளபதி எனக்கு துணையாக இருக்கிறார்.” என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com