NEET விவகாரம்: அதிமுக- காங்கிரஸ் இடையே கடும் விவாதம்

நீட் தேர்வை கொண்டு வந்து ஏழை எளிய மாணவர்கள் வயிற்றில் அடித்தது யார்?.
Minister Rajeshkumar-EPS-Thalavaai sundharam
Published on: 

சட்டசபையில் நீட் நுழைவுத் தேர்வு மானிய கோரிக்கை விவாதத்தின் போது அதிமுக- காங்கிரஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் பேசுகையில்,"

அதிமுக ஆட்சியில் நீட் கொண்டு வரப்படவில்லை. 2011, 2012ல் தான் நீட் தொடர்பான அறிவிக்கை வந்தது

கன்னியாகுமரியில் சித்தா மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி என சட்டசபையில் தளவாய் சுந்தரம் பேச்சு

அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி

நீட் தேர்வை கொண்டு வந்து ஏழை எளிய மாணவர்கள் வயிற்றில் அடித்தது யார்?.

பாஜக கொத்தடிமை எடப்பாடி பழனிசாமி என்றார்கள். ஆனால் சாதித்து காட்டி இருக்கிறார்.

6 புதிய மாவட்டங்களை உருவாக்கியவர் எடப்பாடி பழனிசாமிதான். " என்றார்.

அமைச்சர் ராஜேஷ் குமார்:

2017-ம் ஆண்டு தான் நீட் தேர்வு வந்தது. விரும்பாத மாநிலங்களுக்கு நீட் இல்லை என 2014-ல் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார்.

நீட் தேர்வால் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர்களின் பெற்றோரை ராகுல் சந்தித்தார்.

எடப்பாடி பழனிசாமி:

2010-ம் ஆண்டு டிசம்பரில் நீட் அறிவிக்கை வந்தது. காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட் அறிவிக்கை வெளியிடப்பட்டது.

நீட் தேர்வுக்கு விலக்கு தேவை என்பதே அதிமுகவின் கொள்கை.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக நடந்து கொள்ள முடியாது.

X

Maalai Malar
www.maalaimalar.com