இசையமைப்பாளர் தேவா மறைவு: ஜி.கே.வாசன் இரங்கல்

தமிழ் திரைப்பட உலகின் புகழ்பெற்ற இசையமைப்பாளரும், பாடகருமான தேவா அவர்கள் தனக்கென்று ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார்.
Deva- GK Vasan
Published on: 

பிரபல இசையமைப்பாளர் தேவாவின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. தேவாவின் மறைவு செய்தி அறிந்து திரைப்பிரபலங்கள் பலரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள தேவாவின் இல்லத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

இதனிடையே, இசையமைப்பாளர் தேவாவின் மறைவுக்கு, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழ் திரைப்பட இசையமைப்பாளரும், பாடகருமான தேவா அவர்களின் மறைவு

மிகவும் வருத்தத்துக்குரியது. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். தேனிசைத் தென்றல் என அழைக்கப்படும் தேவா தென்னிந்திய திரைப்பட இசையுலகில் மிகவும் பிரபலமானவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

பல வெற்றிப்படங்களுக்கு இசை அமைத்து பாராட்டுக்குரியவர். மெல்லிசைப் பாடல்களுக்கும், கானா பாடல்களுக்கும் தேவா புகழ் பெற்றவர்.

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது, கலைமாமணி விருது, கலை மற்றும் கலாச்சார அகாதமி விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது என பல்வேறு விருதுகளைப் பெற்ற பெருமை மிக்கவர்.

தமிழ் திரைப்பட உலகின் புகழ்பெற்ற இசையமைப்பாளரும், பாடகருமான தேவா அவர்கள் தனக்கென்று ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார்.

தமிழ் திரையுலகில் தனக்கென்று தனித்த இடம் பிடித்த இசையமைப்பாளர். இசையில் மிகுந்த ஆர்வம் கொண்ட தேவா அவர்களின் மறைவு அவர்களின் குடும்பத்தினருக்கும், தமிழ் திரைப்பட இசைக்கும், கலை உலகிற்கும் பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழ் திரையுலகத்தினருக்கும்

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com